எண் சோதிடம்

எண் 7 இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்

எந்த காரியத்திலும் மனக்குழப்பம் ஏற்பட்டாலும் அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் செலவு  குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். 

தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த  நேரத்தில்  பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த  உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  

மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள்  நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். 

இப்போது இல்லற சந்நியாசிகளாக 7ம் எண்காரர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். சோதிட நூல்கள் எல்லாம் இந்தக் கேதுவைப் பற்றி மிகவும் பயமுறுத்துகின்றன. கேதுவைப் போல் கெடுப்பானில்லை! இராகுவைப் போல் கொடுப்பானில்லை என்று சோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. இவர் விஷ்வபாகு என்ற அரக்கனேயாவார். (புராண காலத்தில்) பல்வேறு காரணங்களினால் தேவர்கள் மிகவும் பலவீனமாகவும் சோர்ந்தும் இருந்தார்கள். அசுரர்களைவிட தேவர்கள் மிகவும் பலம் குன்றியிருந்தனர். அசுரர்களின் செல்வாக்கு அப்போது ஓங்கியிருந்தது! தங்களது பலவீனத்தை எப்படி போக்குவது என்ற சிந்தனையில் தேவர்கள் ஆழ்ந்தனர்.

இந்த எண் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது! மற்ற எண்களெல்லாம், மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும் கட்டுப்பட்டவை! ஆனால் இந்த 7 எண் மட்டும் இறைவனின் சர்வ வல்லமை மிகுத் எண்ணாக உள்ளது!

இவர்களது பேச்சில் எப்போதும் பரம்பொருள், விதி, இறைவன் என்ற வார்தைகள் மிகுந்திருக்கும் 7ம் எண்ணானதும் இளமைக் காலத்தில் போராட்டங்களையும், வறுமையையும் (பெரும்பாலோர்க்கு)க் கொடுக்கும். ஆனால் நடு வயதிற்கு மேல் பெருத்த யோகங்களையும், பெரும் செல்வத்தையும் கொடுத்துவிடும். இவர்கள் தங்களின் கடுமையான உழைப்பில் வந்த பணத்தை, ஏழைகளின் நல்வாழ்க்கைக்காகவும், ஆலயத் திருப்பணிகளுக்காகவும், பொதுத் தொண்டிற்காகவும் அனாதை ஆசிரமத்திற்காகவும் செலவழிப்பார்கள்.

இவர்கள் உடையிலே எளிமையும், ஆனால் சுத்தமும் இருக்கும். தங்களது கடமையிலேயே மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்களது செயல்களில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடும் இருக்கும். உலகத்தை உய்விக்க வந்த இயேசு கிறிஸ்து (Jesus Christ) ஆதிசங்கராச்சாரியார், ரவீந்திரநாத தாகூர் ஆகியோரெல்லாம் இந்த 7ம் எண்ணில் பிறந்தவர்களே!

இவர்களுக்குச் சித்து விளையாட்டுக்கள் எல்லாம் எளிதில் கைகூடும்! இவர்கள் உலகப் பயணம் செய்து, தங்களது அனுபவங்களை உலகத்தாருக்கு அழகுடன் எடுத்துரைப்பார்கள். பொருளாதார நிலை 7ம் எண் அன்பர்களுக்குத் திருப்திகரமாக இருக்காது! வேதனைகளும், சோதனைகளும் இவர்களைத் தொடர்ந்து வரும். எந்த ஒரு செயல் தொடங்கினாலும் அதை நிறைவேறுவதற்காகப் பல தடைகளைச் சந்திக்க வேண்டி வரு. கேது பகவான் கொடுக்க ஆரம்பித்தால் அதை வேறு யாரும்(கிரகங்கள்) அழிக்கவோ, தடுக்கவோ முடியாது என்பது சோதிட உண்மையாகும். எப்படியும் நல்ல வளமான வாழ்க்கையைத் தங்களது வாழ்நாளில் அடைந்து விடுவார்கள்.

7ம் எண்ணின் பலம் குறைந்த அன்பர்கள் பலர் உயர் கல்வி அமைந்திருந்தும், திறமைக்கேற்ற ஊதிம் கிடைப்பது மிகுந்த தடைப்படும். பெரும்பாலான 7&¢ம் எண்காரர்கள் இதனை நினைத்து வேதனையும், வாழ்க்கையில் விரக்தியும் அடைகின்றனர்.

பல இலட்சக்கணக்கான மூலதனத்தைப் போட்டும், செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காணாத நபர்களின் எண்கள் 7 ஆக இருப்பதைக் காணலம். அதே போன்று இந்த எண்காரர்கள் தொழில் திடீரென தாழ்ந்து மஞ்சள் கடிதம் (Insolvency Petition) கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கும் ஆளாகின்றார்கள்.

ஆனால் இந்த அன்பர்கள் சலிக்காமல் மனோ தைரியத்துடன் வாழ்க்கையில் போராடுவார்கள். 3ம் எண்காரர்கள், போன்று இவர்களும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். அண்ணன் சொத்து எடுத்துக் கொண்டாரா, பரவாயில்லை! மனைவி அவமதிக்கிறாளா& என் தலைவிதி! என்று இருப்பார்கள். உற்றாரும், ஊராரும் மதிப்பதில்லையே என்னை ஒருநாள் மக்களும், உறவினர்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையும், எதையும் தாங்கிக் கொள்ளும் மனோபலமும் உண்டு! மனத்தில் கற்பனை வளரும். பிரபஞ்ச சக்தியுடன் உடனடித் தொடர்பும் இவர்களுக்கும்க் கிடைக்கும். தங்களது வாழ்க்கையில் கடினமாக உழைத்துத்தான் முன்னேற வேண்டுமே தவிர அடுத்தவர்கள், உறவினர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது!

ஒன்பது எண்களிலும் 9ம் எண்ணுக்கே முன்கோபம் உண்டு. அதை அடுத்து இந்த 7ம் எண்காரர்களுக்கும் முன்கோபம் அடிக்கடி வரும். இந்தக் குணத்தினாலேயே, இவர்களது நல்ல செயல்களும், குணங்களும் மக்களால் மறக்கப்படுகின்றன!

பொதுவாகத் தங்கள் மனத்தில் உள்ளதை அப்படியே வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். இவர்கள் ஆத்மபலம் மிகுந்தவர்கள். அடுத்தவர்களின் தூண்டுதலை எதிர்பார்க்கமாட்டார்கள்.

இவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் போராடுவார்கள், மக்களுக்காக மனம் விரும்பி உழைப்பார்கள். அவர்களின் செய்நன்றியைப் பிரதிபலனாக எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதே இவர்களின் உயர்ந்த குணமாகும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube

Back to Top