எண் சோதிடம்

எண் 8 இல்பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்

அஷ்டவர்கங்கள், அஷ்ட லஷ்மிகள், அஷ்ட ஐஸ்வர்யங்கள், அஷ்டமா சித்திகள் என 8 ஆம் எண்ணும் தெய்வ சக்தி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூட 8 வதாக அஷ்டமி திதியில் பிறந்தவர்தான். ஒவ்வொரு மாதமும் 8,17,26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 8 ஆம்  எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். 8 ஆம்  எண்ணுக்குரிய கிரகம் சனி பகவானாவார். எட்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் தி.றி ஆகும்.

எண் 8. சிறப்புப் பலன்கள்

மக்கள் அனைவரும் பயப்படும் 8ஆம் எண்ணின் சிறப்பு பலன் களைப் பற்றிப் பார்ப்போம்.மக்களின் வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் ஆதாரமாக விளங்குவது இந்த 8 ஆம் எண்ணே! ஆனால் மக்கள் இந்த எண்ணை வெறுத்து ஒதுக்குகிறார்கள். இந்த எண் விதியின் எண்ணாக இருப்பதால், நாம் முற்பிறவிகளில் செய்த கர்மவினைகளை அனுசரித்து நல்ல பலன்களையோ அல்லது தீயபலன்களையோ கொடுக்கிறது!

இவர்கள் எடுத்துக் கொள்ளும் எந்த செயலானாலும் அவற்றில் எதிர்ப்பும், முட்டுக்கட்டையும்உண்டு.ஆனால்எதிர்ப்பையும்,தடைகளையும்பொருட்படுத்தாமல் காரியங்களில்ஈடுபடுவார்கள்.வெற்றிபெறுவார்கள்.இவர்கள் தங்களைப் போல் மற்ற பாதிக்கப்பட்ட மக்களிடம் மிகவும் அன்பு பாராட்டுவார்கள். மனதில் இரக்க குணம் இருக்கும். இவர்களில் பெரும்பாலோர் பெரிய சாதனைகளை, கடின உழைப்புடன் செய்துமுடிப்பார்கள்.இது விதியின் எண்ணாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் வெற்றியோ அல்லது தோல்வியோ தொடர்ந்து வந்த கொண்டே இருக்கும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களது கடமைகளை இவர்கள் தீவிர முனைப்புடன் செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களுக்கு உண்மையான நன்மை செய்வார்கள்.

8 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு உறவினர்களின் ஆதரவு பெரும்பாலும் கிடைக்காது. இதனால் வெளியூர், அடுத்த இன மக்கள், வெளிநாடு என அந்நியர்களிடமிருந்தே இவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். இவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்கள் வந்தால், பின்பு தொடர்ந்து யோகம் வரப் போகிறது என்று பொருள். இதற்குக் காரணம் 8 என்பது இரண்டு பூஜ்யங்களால் உருவாக்கப்பட்டது. 0+0=8. எனவே, முயற்சிகள் எல்லாம் பயன் அடைவதும், பூஜ்யமாவதும் அவர்களது விதிப்படியே அமைகிறது. விதி என்றவுடன் பயப்பட வேண்டாம். இன்று நாம் செய்யும் நல்ல செயல்கள், நாளை நல்ல விதியாக அமைகின்றன! அலட்சியத்துடன் புரியும் தீய செயல்கள், நாளை நிச்சயம் கெட்ட விதியாக மாறி விடுகின்றன! எனவேதான்புறநானூறுகூறுகிறது."தீதும்நன்றும்பிறர்தரவாரா"

எனவே, நேர்மையான வழியில் உழைத்தால் வெற்றி மேல் வெற்றி இவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஆரம்ப காலம் முதலே மக்கள் 8 ஆம்  எண்ணை விதியின் எண் என்று பயந்து வந்துள்ளார்கள். இது தனி மனிதன் வாழ்க்கைக்கும், சமுதாய வாழ்க்கைக்கும் பொருந்தும். இந்த எண்ணின் ஒரு பக்கம் கடுமையான உழைப்பு, கருணை, ஏற்றம், பெருத்த இராஜ யோகம் உண்டு. மறுபக்கம் புரட்சி, எழுச்சி, அராஜகம்,ஒழுங்கின்மைபோன்றவையும்உண்டு!எல்லாம் விதிப்படியேதான் நடக்கிறது என்று இவர்கள் புலம்புவார்கள். பல நேரங்களில் வாழ்வில் விரக்தியும் ஏற்படும். இருப்பினும் தங்களது வாழ்நாளிற்குள், இவர்கள் பெருத்த யோகத்தை அனுபவித்தே செல்வார்கள். மனம் விரக்தியடையும் போது தற்கொலை எண்ணங்கள் கூடச்சிலருக்குத்தோன்றும்.இவர்கள் சிறந்த நீதிமான்கள், தெய்வத்திற்குப் பயந்தவர்கள். 8 ஆம்  எண்ணானது ஒரு மனிதனைப் புடம் போட்டு, அவனைத் தங்கமாக்கி விடும். இவர்களின் வாழ்க்கையில் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளும் 8 ஆம்  எண் வரும் நாட்களிலேயே நடைபெறும்! கிரேக்கர்கள் இந்த எண்ணை "நீதியின் கண்" என்றுஅழைத்தனர்.தாங்கள் எண்ணியதைக் கடைசிவரை நிறைவேற்ற வேண்டும் என்ற தீவிர எண்ணம் உடையவர்கள். தாங்கள் நினைத்ததை அப்படியே வெளியில் சொல்ல மாட்டார்கள். தங்கள் வாழ்வின் பிற்பகுதியில்தான் பெரும்பாலோர் இன்பத்தை அனுபவிக்கின்றனர். இவர்களுக்குத் தன்னம்பிக்கை குறைவு. எனவே, அதை அவசியம் வளர்த்துக் கொள்ளவேண்டும். தங்களை உலகத்தில் தனிமையாக இருப்பதாக உணர்வார்கள். எனவே எளிதில் அடுத்தவர்களை நம்ப மாட்டார்கள்.

இவர்களுக்குப் பெயர் எண் நன்றாக இருந்தால் மட்டுமே, கெட்ட விதியினை மாற்றிக் கொள்ள முடியும். அதில் கவன குறைவாகவோ, அலட்சியமாகவோ நடந்து கொள்ளும்போது,துன்பங்கள்தொடர்ந்துவரும்.பிறர் படும் துன்பம் கண்டு சகிக்காத மனம் கொண்டவர்கள். தங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும், உதவிகிட்டும் இடத்தையாவதுகாட்டுவார்கள்.8ஆம் எண்ணின் ஆதிக்கம் குறைந்தோர் திருட்டு, வழிப்பறி, கொலை, விபச்சாரம் போன்ற வழிகளில் துணிந்து ஈடுபடுவார்கள். அதனால் நிச்சயம் தண்டனையும்(சிறை)அடைவார்கள்.எந்தச் செயலையும் சற்று மெதுவாகவே செய்வார்கள்.தரையைப் பார்த்தே நடப்பார்கள்.எந்தஒரு பரச்சினைக்கும், நடுவராக இருந்து நீதி சொல்லச் சிறந்தவர்கள். தம்மிடம் நட்புக் கொண்டவர்களையும், பகைமை கொண்டவர்களையும், தமது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். உடல் உழைப்பில் இவர்களுக்கு நாட்டம் அதிகம். பெரும்பாலும் தனிமையாக இருப்பதையே விரும்புவார்கள். இவர்களது பேச்சில் விதி, வாழ்க்கை, தர்மம் என்று அடிக்கடி வார்த்தைகள் வரும். இவர்களுக்குக் காதல் விவகாரங்கள் வெற்றி கொடுக்காது. திருமணமும் பொதுவாக அன்னியத்தில் (அடுத்த ஜாதி, மதம், அந்நியநாடு) தான் நடக்கும். இவர்களது செல்வ நிலை ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும். எந்த முன்னேற்றம் வந்தாலும் அதை அனுபவிக்க முடியாமல்பலசோதனைகள்கூடவேவந்துவிடும்.உடம்பிலோ அல்லது மனத்திலோ ஏதாவது ஒரு குறை அல்லது நோய் இருந்து கொண்டே இருக்கும்.

நோய்

தலைவலி, வயிற்றுத் தொல்லை, பல், ஈறு நோய்கள் வரும். வாதத் தொல்லைகளான மலச்சிக்கல், மூட்ட, கழுத்து, முதுகு வலிகள் வரும். கால்களில் அடிக்கடி பாதிப்பு ஏற்படும். குடல் பலகீனம் உடையவர்கள். சிறு வயதுகளில் வயிற்றுவலி பெரும்பாலோர்க்கு இருக்கும். ஆஸ்த்துமா, மூச்சு விடுதல் பிரச்சனை அடிக்கடி உண்டு! தலைவலி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.

இரத்தத்தில் விஷச்சேர்க்கை எளிதில் ஏற்பட்டுவிடும். எனவே அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது! வாதம் மூட்டுப் பிடிப்புகளால் பாதிப்புகள் அதிகம்உண்டு.ஈரல்அடிக்கடிபாதிக்கப்படும்.காபி, டீ, மது போன்றவற்றில் நிதானம் தேவை. உணவில் எலுமிச்சம் பழம், அன்னாசி, வாழை, சிஸ்மிஸ் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். அகத்திக்கீரை மிகவும் நல்லது!

திருமணவாழ்க்கை

இவர்களது திருமண வாழ்வு பெருமையாகச் சொல்லப்படவில்லை! திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கும். தங்களது மனைவியுடன் கூட திறந்த மனதுடன் பழக மாட்டார்கள். சிலர் தனது மனைவிகளை அலட்சியத்துடன் நடத்துவார்கள். மனைவி எது சொன்னாலும் அதை மறுத்துப் பேசுவார்கள். இதேபோல் 8 Mம்  தேதி பிறந்த மங்கையரும், தங்கள் கணவருடன் அன்பின்றியே நடந்து கொள்வார்கள். தன் மனம்போல் வாழ நினைப்பார்கள். இங்ஙனம் உண்மையான அன்பின்றியே பெரும்பலானா எட்டாம் எண் நபர்கள் வாழ்கின்றார்கள்.இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம். 8 ஆம்  எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது! 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.1, 4 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களே இவர்களுக்குச் சிறந்த நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 8ம் தேதி பிறந்தவர்களாலும் இவர்கள் நன்மையடையலாம். 6, 5 தேதியில் பிறந்தவர்களாலும் நன்மை அடையலாம்!

17ஆம்தேதிபிறந்தவர்கள்:

இவர்கள் மிகுந்த சோதனைகளைச் சந்திப்பவர்கள். சலிக்காமல் உழைக்கும் இயல்பினர். எப்படியும் இறுதியில் பெருமைமிகு வாழ்க்கையை அடைவார்கள். நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்தியசாலிகள். குற்றங்களை மன்னிக்கும் கருணை மனமும் உண்டு. ஆன்மிக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள். இவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. பணம் சேர்ப்பதில் சமர்த்தர். துணிந்து எடுக்கும் சில முடிவுகள் தோல்வியும் அடையும். இருந்தாலும் அதை வெளியே தெரியாமல் வெற்றிக்கு மாற்றும் சாதுர்யம் உண்டு. இவர்களே பெருந் திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்துவார்கள். தங்களுக்கு வரும் தடைகளையும், சோதனைகளையும் துவம்சம் செய்யும் துணிவு படைத்தவர்கள்.

26ஆம்தேதிபிறந்தவர்கள்:

பொருளாதார விஷயத்தில் குறைபாடு உடையவர்கள். முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகள் விரயமாகும். பண விரயங்களும் அதிகம் உண்டு. இவர்கள் அடுத்தவர்களால் அடிக்கடி ஏமாற்றம் அடைவார்கள். இருப்பினும் மனோ தைரியம் மிக்கவர்கள். எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிறைந்தவர்கள். எப்படியும் உயர்ந்த பதவி/ தொழிலை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைப்பவர்கள் இவர்கள்தான். பிறரால் அடிக்கடி வீண்பழி சுமத்தப்படுவார்கள். கற்பனைச் சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. விதியின் சதியால் அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார்கள்.இருப்பினும் இறுதிக் காலத்தில் பொன்னும், பொருளும், கீர்த்தியும் கிடைத்து விடும். இவர்கள் மக்கள் அனைவரையும் எந்த வித்தியாசமின்றிச் சமமாக நேசிப்பார்கள்காதல்விவகாரங்களில்சிக்கல்கள்ஏற்படும்.

அதிர்ஷ்டநாள்

இவர்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வரும் 1, 10, 19, 28 ஆகிய நாட்கள் மிகச் சிறந்தவை. 8 ஆம்  எண்ணின் தீய குணங்களை 5ம் எண் மட்டுமே போக்கும் வல்லமை படைத்தது. எனவே, 5, 14, 23 ஆகிய நாட்களும் இவர்களுக்கு நன்மையே புரியும். எனவே கூட்டு எண் 1 மற்றும் 5 வரும் நாட்கள் மிகவும் அதிர்ஷ்டமானவை.

4, 13, 22, 31 நாட்களில் நல்லவை தாமாகவே நடக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் இவர்கள் அந்த நாட்களில் தேடிச் செல்லக்கூடாது! 9 ஆம்  எண்ணும் நல்ல பலன்களையேசெய்யும்.ஒவ்வொரு மாதத்திலும் 8, 17, 26 ஆகிய நாட்களும், 2, 11, 20, 29 நாட்களும் கெட்ட பலன்களையே கொடுக்கும். கூட்டு எண் 8 மற்றும் 2 வரும் நாட்களைத்தவிர்க்கவேண்டும்.

அதிர்ஷ்டஇரத்தினம்  

இவர்களுக்கு நீலம் (Blue Sapphire) என்னும் இரத்தினக் கல்லே மிகவும் அதிர்ஷ்டமானது! ளிறிகிலி (மரக்கல்) என்ற இரத்தினக் கல்லையும் உபயோகிக்கலாம். மேலும லெபராடோரிட் (LABRADORIATE) லாஜர்த் (LAPIS LAZULLI) என்னும் கற்களையும் உபயோகப்படுத்தலாம்.

அதிர்ஷ்lநிறங்கள்  

இவர்களுக்கு மஞ்சள் நிறமே சிறந்தது. ஆழ்ந்த பச்சை, நீலம் ஆகியவை நன்மை தரும். மற்றவர்களை சந்திக்கச் செல்லும்பபோது எப்போதும் நீலநிறம் மற்றும் மஞ்சள் நிற ஆடைகள்சிறந்தவை.கருப்பு, பாக்குக்கலர் மற்றும் கரும்சிவப்பு ஆகிய நிறங்களைத் தவிர்க்கவேண்டும்.8ஆம் தேதி பிறந்தவர்கள் : இவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள். அமைதியான வாழ்க்கை உண்டு. மதப்பற்று அதிகம் உண்டு. இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்களாக இருப்பார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். அடுத்தவர்களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமைகொண்டவர்கள்.சமூக சேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். கடுமையான உழைப்பாளிகள். பெரும் சாதனை புரிவார்கள். நலிவுற்றவர்களைக் கைதூக்கி விடும் நல்லஇயல்பினர்.தனித்துச்செயல்புரியும்ஆற்றல்உடையவர்கள்.


மேலதிக வீடியோ செய்திகளை கீழே உள்ள லிங்கை கிளிக் பார்வையிட செய்யவும்

lanka4 youtube

Back to Top