நடிகை மஞ்சுளா இறந்த நாள் 23-7-2020

59 வயதான மஞ்சுளா விஜயகுமார் சாந்தி நிலையம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை துவங்கினார்.

அதன் பிறகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப்படமான ரிக்சாக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜொலித்துப் புகழ்பெற்றார்.

மற்றொரு எம்.ஜி.ஆர். சூப்பர் ஹிட் திரைப்படமான உலகம் சுற்றும் வாலிபனிலும் மஞ்சுளா லீட் ரோலில் நடித்தார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். சிவாஜி தவிர என்.டி.ஆர், ஜெமினி கணேசன், கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஷ்ணுவர்தன் ஆகியோருடனும் நடித்துள்ளார் மஞ்சுளா.

1980களில் அம்மா மற்றும் சகோதரி கதாபாத்திரங்களில் தோன்றினார். 1990களிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார். பிரியங்கா என்ற படத்தில் இவரது ரோல் பரவலாகப் பேசப்பட்டது.

இவர் 100 படங்களில் நடித்திருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஞ்சுளாவுக்கு ப்ரீதா, வனிதா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பெண் வாரிசுகள் உள்ளனர்.மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtu

Back to Top