சமையல்

கிராமத்து சமையல்

சைவ உணவு சோயாமீற் கறி

தேவையான பொருட்கள்:

 •  சோயா மீட்; – ஒரு கப்,
 •  இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், 
 • வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
 • மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், 
 • தனியாத்தூள் (மல்லித்தூள்) – 2 டீஸ்பூன்,
 •  மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், 
 • தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), 
 • பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2 ,
 •  கொத்தமல்லித்தழை – சிறிதளவு, 
 • எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், 
 • உப்பு – தேவையான அளவு. 
 • அரைத்த தேங்காய்த்த 3 டீஸ்பூன்

செய்முறை:  

பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கிச் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.

அதனுடன் வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோயா உருண்டைகள், உப்பு, தேவையான அளவு தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து, குக்கரை மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtu

Back to Top