சோதிடம்

மகரம் | ராகு கேது பெயர்ச்சி 2020

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். மகர ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டிலும், கேது பதினொன்றாம் விட்டிலும், சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், ஐந்தாம் வீடு என்பது, குழந்தைகள், புத்திசாலித்தனம், படைப்புத்திறன், காதல் மற்றும் ஊக வணிகம் போன்றவற்றைக் குறிக்கும். பதினொன்றாம் வீடு, லாபம், தொழில் மூலம் வருமானம், மூத்த சகோதர சகோதரிகள், நண்பர்கள், சமூக வட்டம் மற்றும் ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றைக் குறிக்கும்.

நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன.எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.              

மகர ராசி அன்பர்களே, 

ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான மகரத்திற்கு ஐந்தாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது பொதுவாக உங்கள் வாழ்வைச் சிறக்கச் செய்யும் என எதிர்பார்க்கலாம். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள், உங்களுக்குத் திருப்தி தருவதாக அமையும். உங்களிடம் அமைந்துள்ள பரந்த நுண்ணறிவு, இப்பொழுது உங்களுக்குப் பெரிதும் கை கொடுக்கும். இது, வாழ்க்கைச் சூழ்நிலைகளைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்தி, உங்களை, புத்தி சாதுர்யத்துடனும் செயல்படத் தூண்டும். உங்கள் கற்பனைத் திறன் மற்றும் படைப்புத் திறன் போன்றவையும், வழக்கத்தை விட இப்பொழுது சற்று கூடுதலாகவே இருக்கும். எனினும், நடைமுறை அம்சங்களைக் கருத்தில் கொண்டு செயல்பட மறந்து விடாதீர்கள். ஊக வணிகங்களில் ஈடுபட வேண்டாம். ஏனெனில் இவை நீங்கள் எதிர்பார்த்தது போல அமையாமல் போகலாம். உங்களில் சிலர், இந்த நேரத்தில், புதியவர்களுடனோ அல்லது தொலைதூரத்தில் உள்ளவர்களுடனோ நட்பு கொள்ளக்கூடும். ஒரு சிலர் நீண்ட தூர அல்லது வெளிநாட்டு சுற்றுலா செல்லும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் கடந்தகால செயல்களின் முடிவுகளையும் நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில் அனுபவிப்பீர்கள். இதன் மூலம் வாழ்க்கையில் சில முக்கியப் பாடங்களை நீங்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எனினும், குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிரது. மொத்தத்தில், இந்தப் பெயர்ச்சி உங்களை உலக இன்பங்களை நோக்கி அழைத்துச் செல்லும் எனலாம். 

கேது உங்கள் ராசிக்குப் பதினொன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

கேது பகவான், இப்பொழுது, உங்கள் ராசியான மகரத்திற்குப் பதினொன்றாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, வாழ்க்கையில் நீங்கள், ஓரளவு கடினமான தருணங்களைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் ஆசைகளும், நம்பிக்கைகளும் நிறைவேறாமல் போகலாம். இது பொதுவாக அதிருப்திக்கு வழி வகுக்கும். வேலை அல்லது தொழில் மூலம் நீங்கள் பெறும் லாபம் மற்றும் ஆதாயம், வழக்கத்தை விட குறைவாக இருக்கக் கூடும். உங்கள் மூத்த உடன்பிறப்புகளுடன் தவறான புரிதலுக்கான வாய்ப்புகளும் உள்ளன. அதே நேரம், உங்கள் அணுகுமுறை, பொதுவாக, உங்கள் நண்பர்களுடனும் சமூக வட்டங்களுடனும் உங்கள் நல்லுறவைப் பேணுவதற்கு ஏற்றதாக இல்லாமல் போகலாம். மற்றவர்களுடனான உங்கள் தொடர்பும் கூட, குறைவாகவே இருக்கக் கூடும். மேலும், இந்தப் பெயர்ச்சியின் பொழுது, குறைந்த அளவிலான நண்பர்களுடன் மட்டுமே, நீங்கள் தொடர்பில் இருக்க விரும்புவீர்கள்.  தொலை தூர உறவினர்களுடனான உங்கள் உறவுமுறைகளிலும், இதே நிலை தான் நீடிக்கும். உங்களில் சிலர், காது கேளாமை அல்லது காது தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்படலாம். எனவே, கவனம் தேவை.

ராகு கேது பெயர்ச்சி பரிகாரங்கள்

ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யவும், இவர்களின் அருளால் நற்பலன்களைப் பெறவும் 

அர்ச்சனை

அபிஷேகம்

ஹோமம்

பூஜை

ஆகியவை செய்து, ராகு கேதுவை வணங்கி வழிபடுங்கள்.மேலும் ராகு, கேது வழிபாட்டில் பங்கு கொண்டும், இந்த நிழல் கிரகங்களின் நல்லாசிகளைப் பெற்றிடுங்கள். 

ராகு கேது பெயர்ச்சி எளிய வீட்டுப் பரிகாரங்கள்

கீழ்க்கண்ட நரசிம்ம காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்

‘ஓம் வஜ்ரநகாய வித்மஹே

தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹே

தன்னோ நரசிம்ம ப்ரசோதயாத்’

கீழ்க்கண்ட நரசிம்ம மகா மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்

‘உக்ரம் வீரம் மகா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம்

ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம் மிருத்யுர் மிருத்யும் நமாம்யஹம்’

தேங்காய், கடுகு எண்ணெய் மற்றும் போர்வைகளை தானம் செய்யவும்

மேலும், கோயில்களிலும், ஆன்மீகத் தலங்களிலும் கருப்பு எள் தானம் செய்யவும் 

கேதுவின் பாதக விளைவுகளைத் தவிர்க்க, மற்றவர்களை எளிதில் நம்பி எதையும் செய்யாமல் இருக்கவும் 

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ளவும். ஆன்மீக நடவடிக்கைகளில் அதிக நேரம் செலவிடவும்  


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top