சோதிடம்

கும்பம் | ராகு கேது பெயர்ச்சி 2020

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். கும்ப ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிலும், கேது பத்தாம் வீட்டிலும், சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், நான்காம் வீடு என்பது தாய், சுக போகம், உயர் கல்வி, நிலம், சொத்துக்கள், வீடுமனை விற்பனை போன்றவற்றையும், பத்தாம் வீடு, தொழில், சமுதாய அந்தஸ்து, அதிகாரம், பொது வாழ்க்கை ஆகியவற்றையும் குறிக்கும்.

நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன. எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.               

கும்ப ராசி அன்பர்களே, 

ராகு உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

ராகு பகவான், இப்பொழுது, உங்களது கும்ப ராசிக்கு நான்காம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்கள் வாழ்க்கையில் சில சுவாரஸ்யமான தருணங்களுக்கு வழி வகுக்கக் கூடும். ஆனால் அதே நேரம், சில சங்கடங்களையும் உடன் அழைத்து வரும் என்றும் சொல்லலாம். இப்பொழுது, வாழ்க்கை வசதிகள் மற்றும் லௌகீக இன்பங்கள் சற்று அதிகரிக்கக் கூடும். வளம், செல்வச் செழிப்பு போன்றவற்றுடன் கூடிய நவீன வாழ்க்கை வாழும் வாய்ப்பு, உங்களுக்குக் கிட்டும். பொதுவாக, ஆன்மீக ஈடுபாட்டை விட உலக இன்பங்களை அனுபவிக்கும் நாட்டம் பெருகும். ஆனால் இதன் காரணமாக, உங்கள் மனதில் நிலவும் வழக்கமான அமைதி குலையும். நிலங்கள், வீடுகள் அல்லது சொத்துக்களை வாங்குவது, விற்பது போன்ற ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் குறித்து, நீங்கள் இப்பொழுது, கவனமாக இருப்பது அவசியம். பொதுவாக உங்கள் தாயார் உடல்நிலை பாதிக்கப்படலாம். எனவே, உங்களில் சிலருக்கு தாயாரின் உடல் நிலை பற்றிய கவலை இருக்கும். உங்கள் பாதுகாப்பு என்பதும் இப்போது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். எனவே  வாகனம் ஓட்டும் பொழுது எச்சரிக்கை தேவை. ஹெல்மெட் அணிவது, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது, அதிக வேகத்தைத் தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுவது அவசியம். உங்களில் சிலர், புதிய ஊர்களுக்கு இடம் பெயரும் வாய்ப்பும் உள்ளது. இந்தப் பெயர்ச்சியின் பொழுது, மாணவர்கள், தங்கள் விருப்பப்படி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதற்கான நல்ல வாய்ப்புகளும் உள்ளன.

கேது உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

கேது பகவான், இப்பொழுது, உங்கள் ராசியான கும்பத்திற்குப் பத்தாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, பாதகங்களை விட, உங்களுக்குச் சாதகங்களே அதிகம் ஏற்படும் எனலாம். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவீர்கள். இதனால் அதிக உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் உங்கள் கடமைகளை நிறைவேற்றுவீர்கள். இருப்பினும், அதே சமயம், பொறுப்புகள் பலவற்றை ஏற்றுக் கொள்வதையும் தவிர்த்து விடுவீர்கள்.  சம்பளம் பெறும் ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். மதம், ஆன்மீகம் சார்ந்த துறைகளான ஜோதிடம், கைரேகை, வாஸ்து சாஸ்திரம், அல்லது ஃபெங் சூய் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களும் இப்பொழுது சிறப்பாகச் செயல்பட்டு, தொழில் முன்னேற்றம் காணலாம். எனினும், எந்தவொரு முறையற்ற அல்லது ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளிலும் நீங்கள் ஈடுபடாமல், விலகி இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது உங்களுக்கு நன்மை தரும் என்பதை உறுதியாகக் கூறலாம். இந்தக் காலகட்டத்தில், உங்களில் சிலர், உலக வாழ்க்கையில் விரக்தி அடைந்து, ஆன்மீகப் பாதையை நோக்கித் திரும்பும் வாய்ப்பும் உள்ளது. 

ராகு கேது பெயர்ச்சி பரிகாரங்கள்

ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யவும், இவர்களின் அருளால் நற்பலன்களைப் பெறவும் 

அர்ச்சனை

அபிஷேகம்

ஹோமம்

பூஜை

ஆகியவை செய்து, ராகு கேதுவை வணங்கி வழிபடுங்கள்.மேலும் ராகு, கேது வழிபாட்டில் பங்கு கொண்டும், இந்த நிழல் கிரகங்களின் நல்லாசிகளைப் பெற்றிடுங்கள். 

ராகு கேது பெயர்ச்சி எளிய வீட்டுப் பரிகாரங்கள்

ராகுவிற்கான கீழ்க்கண்ட வேத மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்

‘ஓம் க்யான்ஷ்சித்ர ஆபுவ்த்வதி சதா வ்ருத் சகா

க்யா ஸ்சின்ஷ்த்யா வ்ரித ஓம் ராகவே நமஹ’

கேதுவிற்கான கீழ்க்கண்ட வேத மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்

‘ஓம் கேதும் க்ரின்வன் கேதவே பேஷோ மர்யா அபேஷ்ஸே

சமுஷ்ட்பிர்ஜா யதா ஓம் கேதவே நமஹ’

சிவாலயங்களுக்குப் பழம் மற்றும் பால் வழங்கி, வழிபடவும்  

அமாவாசை நாட்களில் ஆலயங்களுக்கு 4 தேங்காய்களை அளிக்கவும் 

வீதியில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு அளித்துப் பராமரிக்கவும் 

சூரிய அஸ்தமனம் ஆகி ஒரு மணி நேரத்திற்குள் இரவு உணவை முடித்துக் கொள்வது நல்லது


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

 

Back to Top