சோதிடம்

மீனம் | ராகு கேது பெயர்ச்சி 2020

நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். மீன ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிலும், கேது ஒன்பதாம் வீட்டிலும், சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், மூன்றாம் வீடு என்பது, தைரியம், தகவல் தொடர்பு, இளைய உடன்பிறப்பு, அண்டை அயலார், ஊடகங்கள் மற்றும் சிறிய பயணங்களைக் குறிக்கும். ஒன்பதாம் வீடு, தந்தை, முன்னோர்கள், மேலதிகாரிகள், பாக்கியம், அதிர்ஷ்டம், தர்மம், நீதி மற்றும் நீண்ட பயணங்களைக் குறிக்கும்.

நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன. எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.             

மீன ராசி அன்பர்களே, 

ராகு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

ராகு பகவான், இப்பொழுது, உங்களது மீன ராசிக்கு மூன்றாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு நன்மையையும், தீமையையும் கலந்து அளிக்கும் எனலாம்.  எந்தவொரு சூழ்நிலையையோ, சிக்கலையோ எதிர்கொள்ளும் பொழுது நீங்கள் தைரியத்துடன் செயல்படுவீர்கள். இப்பொழுது உங்கள் தகவல் தொடர்புத் திறனும் சிறந்து விளங்கும். இதன் காரணமாக, நீங்கள் புதிய  அறிமுகங்களை விரைவாகப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் குறுகிய காலப் பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக இவை, நீங்கள் இது வரை சென்றறியாத இடங்களுக்கான பயணங்களாக இருக்கலாம். உங்கள் இளைய உடன்பிறப்புகள் மற்றும் சக ஊழியர்களுடன் உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்படவும், இப்பொழுது வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை. உங்களில் சிலர் கற்பனையான எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படக் கூடும், இந்த விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் கற்பனை, உங்கள் கண்களிலிருந்து நடைமுறை அம்சங்களை மறைத்து விடக்கூடும். எனவே யதார்த்தம் அறிந்து நீங்கள் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. உங்கள் மனதில் லட்சியத்தை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், இப்பொழுது குறுகிய கால இலக்குகளை அடைய முயற்சி செய்வதே நல்லது. உங்களில் சிலர் இந்த நேரத்தில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் பலவற்றை வாங்க விரும்புவீர்கள். ஆனால் உங்கள் பொருளாதாரம் அதற்கு இடம் அளிக்குமா என நீங்கள் யோசிக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தோள்கள் மற்றும் கைகளில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும், எனவே, இந்தப் பகுதிகளில் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். 

கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

கேது பகவான், இப்பொழுது, உங்கள் ராசியான மீனத்திற்கு ஒன்பதாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சி பெரும்பாலும், உங்கள் ஆன்மீக நாட்டத்தைக் குறிப்பதாகவே அமையக்கூடும். தனிப்பட்ட முறையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, நீங்கள் மிகவும் நேர்மையாகவும், நெறிமுறைகளை அனுசரித்தும் செயல்பட முனைவீர்கள். இது உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்குக் நன்கு உதவக்கூடும். உங்களில் பலர், தங்கள் ஆன்மீகப் பயணத்தையும், இறை நாட்டத்தையும், இப்பொழுது புதிதாக ஆரம்பிக்கும் வாய்ப்பும் உள்ளது. நீங்கள் யாரைக் குறித்தும், வெறுப்பையோ, தவறான எண்ணங்களையோ வளர்த்துக் கொள்ள மாட்டீர்கள். உங்களின் இந்த உயர்ந்த பண்பு, மற்றவர்களுடைய மரியாதையையும், நன் மதிப்பையும் உங்களுக்குப் பெற்றுத் தரும். உங்களில் சிலருக்கு, குருக்கள் அல்லது ஆன்மீக வழிகாட்டிகள் போன்றவர்கள் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நீங்கள் இந்தக் காலகட்டத்தில், உங்கள் பெற்றோர் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதங்களை நாடலாம். அவர்களின் ஆசி உங்களுக்கு உற்சாகத்தை அளித்து, உங்கள் மனதில் உன்னத எண்ணங்கள் தோன்ற உதவி புரியும். யோகா, தியானம் போன்ற உள்ளம் மற்றும் உடல் ஆற்றலைப் பெருக்கும் பயிற்சி முறைகளைக் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு இது பொன்னான தருணம் என்று கூறலாம். எனவே, மெய்ஞானம் காண்பதற்கு இது மிக உகந்த நேரமாக அமையும். 

ராகு கேது பெயர்ச்சி பரிகாரங்கள்

ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யவும், இவர்களின் அருளால் நற்பலன்களைப் பெறவும் 

அர்ச்சனை

அபிஷேகம்

ஹோமம்

 பூஜை

ஆகியவை செய்து, ராகு கேதுவை வணங்கி வழிபடுங்கள். மேலும் ராகு, கேது வழிபாட்டில் பங்கு கொண்டும், இந்த நிழல் கிரகங்களின் நல்லாசிகளைப் பெற்றிடுங்கள். 

ராகு கேது பெயர்ச்சி எளிய வீட்டுப் பரிகாரங்கள்

கீழ்க்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும் 

‘ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹீ  தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்’

கீழ்க்கண்ட ‘மனோஜவம் மாருத துல்யவேகம்’ மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும் 

‘மனோஜவம் மாருத துல்யவேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

வாதத்மஜம் வானரயுத முக்யம் ஸ்ரீ ராம தூதம் சரணம் ப்ரபத்யே’  

ஆலயம் சென்று வினாயகர், நரசிம்மர், சிவன் மற்றும் துர்கையை வழிபடவும்

நெற்றியில் சிந்தூரம் இட்டுக் கொள்ளவும்  

உங்கள் குரு, மத குருமார்கள், ஆலய அர்ச்சகர்கள் மற்றும் அந்தணர்களின் ஆசிகளைப் பெறவும் 

ஏழை மக்களுக்கு நீலம், கருப்பு அல்லது ஆழ்ந்த நிற ஆடைகளை தானம் செய்யவும் 

உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுக்கும்,  அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கவும் 


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top