கவிதை

புத்தன் வீட்டுப் பூக்கள்

கெட்டதைப் புதை நல்லதை விதை

நிகழ்காலத்தில் முள்கள் இருந்தாலும்

எதிர்காலத்தில் பூக்கள் மலரட்டுமே.

எங்கும் இருள் சூழ்ந்தாலும் ஏதோ? ஓர் இடத்தில்

ஒரு விளக்கு ஏற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

அணைக்க மறந்த நெருப்பு ஆளைப் பற்றிக் கொள்வது போல்

அழிக்க மறந்த தீமை அடுத்தவர் உயிரைத் தேடிக் கொல்லும்.

ஒவ்வொரு நாளும் விடியும் போது ஏதோ? ஒன்றுக்காக

ஒருவன் சிரிக்கிறான், ஒருவன் அழுகிறான்.

முயற்சி செய்து தோற்றுப் போகையில் அனுபவங்கள் உன்னை வழிநடத்தும்

முயற்சி செய்யாமல் தோற்றுப் போகையில் சிறு கல்லும் உந்தன் வழிதடுக்கும்.

அவசரமாகவோ? அலட்சியமாகவோ?

எந்த ஒரு முடிவையும் எடுத்து விடாதே

அது உன்னைக் கடைசியில் அவதிபடவே வைக்கும்.

போற்றுவதோ? தூற்றுவதோ?

எதுவும் தானாக நடப்பதே இல்லை

நீதான் அதற்கான விதையை விதைக்கிறாய்.

ஏதோ? ஒரு காரணம் சொல்லி

இந்த உலகம் உன்னைப் புறந்தள்ளவே பார்க்கும்

அதனால் உன்னைப் புதுப்பித்துக் கொண்டே இரு.

கடவுளுக்கு அள்ளிக் கொடுப்பதை விட

கடினத்தில் இருப்பவருக்குக் கிள்ளியாவது கொடு

கடவுள் நேரில் காட்சி தருவார்.

உனக்குள் இருக்கும் அறியாமையைப் பயன்படுத்தி

உன்னையே ஆள நினைப்பவர்கள் இந்த உலகில் அதிகம் இருக்கின்றனர்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube


Back to Top