சமையல்

கிராமத்து சமையல்

முருங்கைக்காய் கறி

தேவையானவை:

துண்டுகளாக்கிய முருங்கைக்காய் - 2 கப்

புளிக்கரைசல் - அரை கப்

குழம்புப்பொடி - 3 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - ஒரு கப்

பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

பூண்டு - 6 பல் (நறுக்கவும்)

தக்காளி - ஒன்று (நறுக்கவும்)

கடுகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - 10 இதழ்கள்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துண்டுகளாக்கிய முருங்கைக்காயை நடுவில் இரண்டாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய முருங்கைக்காயைப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல் ஊற்றி உப்பு, குழம்புப்பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். எல்லாமாகச் சேர்ந்து கொதித்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்துள்ள முருங்கைக்காய் துண்டுகளைச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கி எல்லாவற்றையும் நன்கு கலந்துவிடவும். இது சாதத்தில் வைத்து சாப்பிடவும், புட்டுக்குத் தொட்டு சாப்பிடவும் ஏற்றது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top