சோதிடம்

இன்றைய ராசிபலன் (28-07-2020)

மேஷம்: 

உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதர வகையில் நன்மை உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் தேவையான ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்: 

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயமுண்டு. அரசாங்க விஷயங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

மிதுனம்:

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்துவார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.  வாகனப் பழுது நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்: 

எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகள் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்: 

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கன்னி: 

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பெருகும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வாகனப் பழுது நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

துலாம்: 

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. அதை பெரிது படுத்த வேண்டாம். அனாவசியமாக மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: 

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம் . அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

தனுசு: 

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் அந் தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

மகரம்: 

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.

கும்பம்:  

குடும்பத்தில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் அனைத்தும் தடையின்றி முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.

மீனம்: 

சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பில் முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top