உலக கல்லீரல் தினம் 28-7-2020

இன்று உலக கல்லீரல் தினம், கல்லீரல் அழற்சி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான இன்று அவரது நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

கல்லீரலைத் தாக்கக்கூடிய ஹெபடைட்டிஸ் எனப்படும் மஞ்சள்காமாலை நோயால் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஆண்டுதோறும் ஹெபடைட்டிஸ் ஏ வைரஸால் 1.5 மில்லியன் பேரும் ஹெபடைட்டிஸ் பி வைரஸால்

2 பில்லியன் பேரும் ஹெபடைட்டிஸ் சி வைரஸால் 150 மில்லியன் பேரும் பாதிப்புக்குள்ளாவதாகவும் கூறப்படுகிறது.

ஹெபடைட்டிஸ் சி கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது என்றாலும் காலப்போக்கில் கல்லீரலில் தழும்பை ஏற்படுத்தி கல்லீரல் அரித்துப்போகும் அளவுக்கு இதன் பாதிப்பு தீவிரமாக இருக்கும். இத்தகைய பாதிப்புகளுக்கு மதுப்பழக்கம், போதைப்பழக்கம் மட்டுமல்லாமல் ரசாயனம் மற்றும் கொழுப்பு போன்றவையும் காரணமாக சொல்லப்படுகிறது. இவற்றின் அடிப்படையில் உலக அளவில் 500 மில்லியன் பேர் நாள்பட்ட ஹெபடைட்டிஸ் பி அல்லது ஹெபடைட்டிஸ் சி-யால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக கல்லீரல் அழற்சி ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

ஹெபடைட்டிஸ் சி வைரஸ் தாக்காமலிருக்க தேவையற்ற ஊசிமருந்துகளைத் தவிர்ப்பதுடன் போதைமருந்து உள்ளிட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும் குறிப்பாக ஊசி உள்ளிட்ட உபகரணங்களை ஒருவர் பயன்படுத்திய பிறகு, சுத்திகரிக்காமல் பயன்படுத்தக்கூடாது.

அதேநேரத்தில் கல்லீரலில் அழற்சி உள்ளவர்கள் திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ் போன்றவற்றைத் தினமும் அருந்துவதன்மூலம் சிறுநீர் எளிதாக வெளியேறும். எலுமிச்சைச் சாற்றைத் தண்ணீருடன் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் செல்கள் பலமடையும். இது மஞ்சள்காமாலைக்கு மிகவும் நல்லது. அன்றாட சமையலில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மோரில் சீரகத்தூள் கலந்து குடித்து வந்தால் ஜீரணம் மேம்படும். சமையல் எண்ணெயை அதிகளவில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதுடன் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு நல்லது. தொடர்ந்து பின்பற்றினால் கல்லீரல் நோய் வராமல் தடுக்கும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtu

Back to Top