பேட்டிங்கின் போது நான் இதை செய்வேன்...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆடுகளத்தில் மட்டுமல்ல அவர் சமூக வலைதளங்களிலும் தனிப்பட்ட முறையில் சாதனை நிகழ்த்துவார். அதாவது வேறு எந்த ஒரு வீரருக்கும் இல்லாத வகையில் அவரது ஃபேஸ்புக், இன்ஸ்டா, டுவிட்டரில் எண்ணற்ற ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டாவில் கோலியி 70 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கிறார்கள். இதுவரை இந்தியாவில் ஒரு வீரருக்கும் இவ்வளவோ ஃபாலோயர்கள் பிந்தொடர்கிறார்கள் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோலி தனது பேட்டிங் ஸ்டைலைப் பற்றிக் கூறியுள்ளதாவது :

ஒரு பவுலர் பந்து வீசும்போது அதை நான் உற்றுக் கவனிப்பேன். அவருடைய மணிக்கட்டு, உடல்மொழிகள் அவர் கையைச் சுழற்றும் முறை ஆகியவற்றை நன்கு உற்றுக் கவனித்து அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு அதை மைதானத்தைதாண்டி அடிப்பதே பெரிய சுவாரஸ்யம் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த பந்துகளை எப்படிஎதிர்கொள்வது என்பதை அறிந்து பயப்படாமல் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top