நடிகர் அர்னால்ட் ஸ்வார்சுநேகர் பிறந்த நாள் 30-7-2020

அர்னால்ட் ஸ்வார்சுநேகர் ஒரு ஆஸ்திரிய-அமெரிக்கர் ஆவார். இவர் ஒரு முன்னாள் உடற்கட்டு கலைஞரும், ர் விளம்பர மாடல், நடிகர், திரைப்பட இயக்குனர், பின்னர் தொழிலதிபர், அரசியல்வாதி என பல பரிணாமங்களுக்கு சொந்தக்காரரும் ஆவார். இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் 38ஆவது ஆளுநராக உள்ளார். 

அர்னால்ட் தனது உடற்கலை பயிற்சியினை தனது 15ஆவது வயதிலிருந்தே செய்து வந்தார். இவர் முதல் முறையாக உலக ஆணழகன் பட்டத்தினை தனது 20ஆவது வயதில் வென்றார். திரு.ஒலிம்பியா ஆணழகன் பட்டதை ஏழு முறை வென்றவரும் ஆவார். இவர் உடற்கட்டு கலையை பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார். இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு புகழின் உச்சிக்கே சென்றார். இவரை "ஆஸ்ட்ரியன் ஓக்" என அழைத்தனர்.

ரிபப்ளிக் கட்சியின் சார்பில் தேர்தலி போட்டியிட்ட அர்னால்ட் அக்டோபர் 7,2003 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆளுநராக வெற்றி பெற்றார்.

அர்னால்டும் அவரது மனைவி மரியா ஸ்ரிவர்யும் 25 ஆண்டுகளாக இணை பிரியாத மணவாழ்க்கையில் உள்ளார்கள். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtu

Back to Top