வெள்ளவத்தையில் தொடர்மாடி குடியிருப்பு வீடுகள்...

வெள்ளவத்தை, தெஹிவளை மற்றும் பம்பலபிட்டி வரையான பகுதிகளில் சேரிப்பகுதியில் வாழும் மக்களுக்காக வீடுகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஹேனமுல்ல, ரன்முத்து வீட்டுதிட்டம் ஊடாக 54 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் 15 மாடிகள் கொண்ட தொகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2அறைகள், ஒரு படுக்கை அறை குளியல் அறை மற்றும் சமையலறை அடங்கும். இதன் பெறுமதி 50 இலட்சம் ஆகும்.

வீட்டுத்திட்டம் நிர்மாணிக்கப்படும் பகுதியில் பாடசாலை மற்றும் மைதானம் ஒன்றையும் அமைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtu

Back to Top