கவிதை

தெய்வம் தந்துவிட்டது

அமெரிக்காவில்

கொலை குற்றம் புரிந்த

குற்றவாளி ஒருவன்

தூக்கிலிடப்பட்டான்,

தூக்கிலிருந்து அவனை

விடுவித்த பின்னும்—அவனுக்கு

உயிர் இருக்கக் கண்டனர்

இரண்டாம் முறை அவனை

தூக்கிலிட சட்டத்தில் இடமில்லை

என்ன செய்வதென்று

தெரியாமல் அதிகாரிகள்

திகைத்து நின்றபோது—அவன்

ஊமையாகிவிட்டதை

உணர்ந்தனர்

விடுதலையானான்

ஊமையாய் ஊரெங்கும்

சுற்றி திரிந்தான்,

இறைவனின் கூற்றுபடி

தவறிழைத்தவனுக்கு

தண்டனையை

தெய்வம் தந்துவிட்டது


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top