சமையல்

கிராமத்து சமையல்

மீன் வறுவல் செய்யுங்கள்

  • மீன் துண்டுகள் 6
  • தனியாத்துாள் 1 தேக்கரண்டி
  • மிளகு துாள் அரை தேக்கரண்டி
  • மிளகாய்த்துாள் 1 தேக்கரண்டி
  • மஞ்சள் துாள் அரை தேக்கரண்டி
  • தேங்காய்த்துறுவல் 1 மேஜைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் 50 மில்லி லீட்டர்.

செய்முறை

மீன் துண்டுகளுடன் உப்புத்துாள், எலுமிச்சைச்சாறு, மஞ்சள் துாள் தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும்

தேங்காய்த்துறுவல், மிளகுதுாள், மிளகாய்த்துாள் தனியாத்துாள் இவற்றை வழுவழுப்பாக அரைத்து எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.

மீன் துண்டுகளுடன் அரைத்த கலவையை தடவிக் கொள்ளவும்.

தோசைக்கல்லைக் காய வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளை 1அல்லது 2 வீதம் போட்டு, சிவக்க வறுத்து எடுத்து பரிமாறவும். இது போல எல்லா மீன் துணடுகளையும் வறுத்து எடுக்கவும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtu

Back to Top