சமையல்

கிராமத்து சமையல்

முட்டை பணியாரம்

என்னென்ன தேவை?

முட்டை - 4,

கடலை மாவு - 1/4 கப்,

அரிசி மாவு - 2 டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,

பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன்,

மிளகு,

சீரகப்பொடி - தலா 1 டீஸ்பூன்,

உப்பு,

எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடித்து அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு, சீரகப்பொடி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top