விசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா..

வெளிநாடு வாழ் இந்திய குடிமக்கள் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு எந்த காரணத்திற்கு வேண்டுமானாலும் வருகை தரலாம். ஆனால் சுற்றுலா காரணத்திற்கு அனுமதி இல்லை என இந்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளுக்கு இந்திய அரசு தளர்வு அளித்தது. கொரோனா தொற்று ஆரம்பிக்கத் தொடங்கியதும் மார்ச் மாதம் முதல் இந்தியாவுக்கு வருகை தர வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

வெளிநாட்டிற்கு சென்று அங்கு சிக்கியிருப்பவர்களை மட்டும் வந்தே பாரதம் விமானம் மூலம் மீட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் மத்திய அரசு பல்வேறு தட்டுப்பாடுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் விமான பயணத்தை தொடங்க முடிவு செய்துள்ளது. சுமார் 8 மாதங்கள் கழித்து ஏற்கெனவே உள்ள அனைத்து விசாக்களும் செல்லத்தக்கதாகும் என அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா விசா, மருத்துவ விசா, எலக்ட்ரானிக் விசா ஆகியவை செல்லாது.

இதன் மூலம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு வரவும் இந்தியாவை விட்டு வெளியேறவும் விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளில் இந்திய அரசு தளர்வுகளை அளித்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்பதற்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருகை தரலாம். ஆனால் சுற்றுலா வரக் கூடாது. இவர்கள் வந்தே பாரதம் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கப்பலிலோ அல்லது விமானத்திலோ இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top