கவிதை

இப்படியும் ஒரு பாதை உண்டாம் .....

A னது மனதில் நீ

B ரமிப்பை ஏற்படுத்திய

C ல நாட்களை

D னமும் எண்ணுகிறேன்

E னிக்கும் நினைவுகளை

F ப்போதும் மறவேன்

G வன் உள்ளவரை

H செயல் செய்தாலும்

I யம் இல்லாமல்

J யக் கொடி நாட்டுவேன்

K ட்டவை

L ல்லாம் கிடைக்கும்

M மதமும்

N நாடும்

O ன்று தான்

P ன் வரும் நாட்களில்

Q வில் எதற்கும் நிற்காமல்

R ரோக்கியமாய்

S aண்டையில்லாமல்

T றமை கொண்டு

U கம் முழுவதும்

V ளையாடி மகிழ்ந்ததை

W edding card அடித்து

X சாம்பிளாக வாழ்ந்து

Y ரலாக,நம் வாழ்வியலை

Z oom ஆக்கி மகிழ்வோம்.

எமது வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது எமது கைகளிலேயே உள்ளது இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் கலையை அறிந்து விட்டால் மகிழ்ச்சி என்பது மட்டற்ற அளவில் பொங்கிப் பிரவகிக்கும். பெரும் செல்வந்தன் ஒருவன் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தேடி அலைந்தான் தன்னுடைய செல்வம் அனைத்தையும் வைரங்களாக மாற்றி மூட்டையாகக் கட்டி குதிரையில் ஊர் ஊராக அலைந்து காண்போரிடம் தனக்கு மகிழ்ச்சி எங்கே என்று காட்டுபவருக்கு அவ்வைரங்களைப் பரிசாகத் தருவதாகக் கூறினான். சந்தித்த ஒருவருமே அவனுக்கு திருப்தி தரக்கூடிய வகையில் பதிலளிக்கவில்லை. 

ஒரு மரத்தடியே அமர்ந்திருந்த குருவின் முன்னே இறங்கி மூட்டையை அவர் முன்னே வைத்து விட்டு மகிழ்ச்சியை தனக்கு இனங்காட்டினால் அம்மூட்டையில் இருப்பது முழுவதும் அவருக்கே என்று கூறினான். கண்களை மூடிக் கொண்டிருந்த குரு அவன் உட்கார்ந்து பார்வையை வேறுபக்கம் திருப்பியதும் அம்மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடினார். திகைத்து விட்ட அவன் " ஜயோ திருடன் என் வாழ்வின் சேமிப்பையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓடுகிறான் " என்று கதறிக்கொண்டே அவர் பின்னால் ஓடினான். அவ்வூரின் மூலை முடுக்கையெல்லாம் அறிந்த அவரை அவனால் பிடிக்க முடியவில்லை. சில ஊர் மக்களும் அவனோடு சேர்ந்து ஓடினார்கள்.

திரும்பவும் அம்மரத்தடியை அடைந்ததும் அங்கு அம்மூட்டை திரும்பவும் அவன் வைத்த இடத்திலேயே இருந்ததையும் அக்குரு கண்களை மூடியபடி அதன் முன்னே அமர்ந்திருந்ததையும் கண்டார்கள். அவனுக்கோ மகிழ்ச்சியைத் தாங்க மூடியவில்லை. ஓடிச்சென்று அம்மூட்டையைக் கட்டிக் கொண்டு ஆனந்தத்தில் அழுதான். "ஆகா இது எனது வாழ்நாள் உழைப்பல்லவா என்று கூவினான். கண்களைத் திறந்த குரு " மகிழ்ச்சியை நீ உன்னுள்ளே தான் வைத்திருக்கிறாய் அதனை அனுபவிக்கும் வழியைத்தான் நீ அறியவில்லை உன்னிடம் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழப்பழகிக் கொண்டால் அதுவே உன் மகிழ்ச்சிக்கு வழி " என்றுரைத்தார். 

அன்பினியவர்களே ! மகிழ்ச்சியைத் தேடத் தேவையில்லை அது எம்முள்ளேயே இருக்கிறது அதன் ஒருப்பிடத்தை அறிந்துகொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வதே எமக்குள்ள திறமை.தோல்விக்கு மேல் தோல்வி வருகிறதே என்று கலங்கத் தேவையில்லை ஏனெனில் அவைதான் எமக்கு வெற்றியின் வாசல்படி எங்கேயிருக்கிறது என்று வழி காட்டுகிறதுரொரு மரத்தில் ஈரம் இருக்கும் வரை அதன் இலைகள் உதிர்வதில்லை அதே போல எம் மனதில் நம்பிக்கை உள்ளவரை நாம் தோற்பதில்லை.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top