கவிதை

சிரிப்பு....

இறைவன் மனிதர்களுக்கு  மட்டுமே அளித்த வரம் சிரிப்பு !

சிரிப்பு ஒன்று தான். ஆனால் அதுவே இடம், பொருள், விதம், நேரம், சிரிப்போர், சிரிக்கப்படுவோர் போன்ற பல சூழ்நிலைகளில் பல உணர்வுகளையும், விளைவுகளையும் ஏற்படுத்த வல்லது ! 

சிரிப்பு...உள்ளங்களை  இணைக்கும், சில நேரங்களில் உள்ளங்களை  உடைக்கும். 

வெற்றியில் சிரிப்பவன் வீரன்.

கண் பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.

துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

மகிமையில் சிரிப்பவன் மன்னன்.

விளையாமல் சிரிப்பவன் வீணன்.

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.

ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.

தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.

கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.

நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி. 

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.

நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.

தற்பெருமையில் சிரிப்பவன் கோழை.

நிலை மறந்து சிரிப்பவன் காதலன்.

அன்பால் சிரிப்பவன் தந்தை...!


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top