கவிதை

தந்தை

எத்தனை   ஜென்மமோ

அத்தனை   ஜென்மத்திலும்

தந்தை  எனும்  வரத்தில்

நீ  எனக்கு  வேண்டுமப்பா!


குழந்தையை போன்ற

உந்தன்  புன்சிரிபை – நான்

பார்க்கும்  நொடிகளெல்லாம்

யுகங்களாக  வேண்டுமப்பா….!


சின்னஞ்சிறு   வயதிலும்

சிரித்தழும்     காலத்திலும்

இன்றைய    இந்த

இன்னத      சூழலிலும் – என்

வாழ்வின்    கதவுச் சாவி

என்றும்   நீயேயப்பா!


என் பெயரை   நீ சொல்லி

அழைக்கும்    நொடிகளெல்லாம்

மறுபிறவி     எடுத்து வந்தேன்

மகளாக    நான்   உன்னிடம்…….


அப்பாவின் வாழ்வில் வந்த

அரிய பொருள்   நானே

என்றும்   சொல்வேன்

ஏறு போல்   நானதை!


சொர்கமே   என்னை

நெருங்கி   வந்தாலும்

அதிலும்   சொர்கம் – என்

அப்பாவின்   காலடி மண்

என் நெற்றி   நீறாவதே!


பத்து மாதம் தாய் சுமக்க

மீதி மொத்தமாக நீ சுமந்தாய்!


துயில் குழம்பி நான்

சிறுவயதில்  சினந்தபோது

தூக்கம் விட்டு   எழுந்திடுவார்

பால் கரைத்து தந்திடுவார்


இன்றுவரை நானவரை

அப்பா   என்றழைத்தால்

அணைத்திடுவார் எனனை

அவர் அன்பிற்கு எல்லை ஏது!


ஆய அரிய கனியென

ஆய்ந்து விட்டாய் என்னை

சாயங்கால   நேரத்தில்

தோய விடாய் என்னை

இத்தனை  செய்து – நீ

பக்குவமாய் வளர்த்தாய்

என் அன்பு அப்பாவே


மாலை நேர நினைவில்

மனத்தில் மௌனமாக – ஒரு

மயக்க வினா – என்

அப்பா இவ்வுலகில் உன்னையல்லாய் யாரப்பா?


வர்னிகா சிவபாலன்

க.பொ.த.உயர்தரம்

நன்றி

இலக்கியா 


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtu

Back to Top