கவிதை

ஆண்டே புத்தாண்டே நம் அருகில் வந்தாயே….!!

ஆண்டே புத்தாண்டே    நம் அருகில் வந்தாயே…..

காலம் காலமாக

பழைய ஆண்டுகள்

ஏமாற்றிப் போனதுபோல்

இந்தாண்டும் செய்வாயோ?………….


நெஞ்சுக்குள்

நெருஞ்சி முள்ளாக

இன்னும் தைத்துக்கொண்டிருக்கும்

கறைகளை மறக்கச்செய்வாயோ? ………….


மாறாத காயங்களை

தீராத வலிகளை தீர்த்து

மாறாக மாற்றங்கள் -மனம்

மகிழ தந்து  நிற்பாயோ?……


இருந்தவைகள்

இல்லாமற் போய்

இல்லாமை மட்டுமே இப்போதிருப்பதால்

இல்லாமை ஒழித்து நிற்பாயோ?……………….


வரம் தர வேண்டாம்

வறுமை போக்கிவிடு

தரம் பிரிக்க வேண்டாம்

தமிழர்களை தமிழராக வாழவிடு………….


உதயமாகும் புத்தாண்டே

பத்தோடு பதினொன்றாய்

இருந்திடாது இருள் விலக

இப்போதே வழி செய்வாயா?……………..


கடந்தவைகள்

கடந்தவகளாகட்டும்-இனி

நடப்பவைகள்

நல்லவைகளாக நடக்கட்டும்…………….


*வனிதாச் சந்துரு*

நன்றி

இலக்கியா


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtu

Back to Top