சுனில் கவாஸ்கர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஹாக்கி வீரருக்கு உதவி

1988 சியோல் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முன்னாள்  ஹாக்கி வீரர்  மொஹிந்தர் பால் சிங். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 58 வயதாகும் இவர்  சிறுநீரக  மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்.இந்தியாவின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் ‘தி சாம்ப்ஸ் அறக்கட்டளை’நோய்வாய்ப்பட்ட  சிங்கிற்கு உதவுகிறது.சிங்கிற்கு சமீபத்தில் விளையாட்டு அமைச்சகமும் நிதி உதவி வழங்கியது.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தற்போது டயாலிசிஸில் உள்ள ஹாக்கி ஒலிம்பியன் மொஹிந்தர் பால் சிங்கின் சிகிச்சைக்காக விளையாட்டு அமைச்சகம் ரூ.10 லட்சம் வழங்கியது.நிதி அவரது மனைவி சிவ்ஜீத் சிங்கிடம் வழங்கப்பட்டது.

எங்கள் முந்தைய ஒலிம்பியன்கள் மற்றும் (சர்வதேச) பதக்கம் வென்றவர்கள்  படும் துன்பங்கள் குறித்து  பற்றி நான் ஊடகங்களில் பார்த்தேன். சிங்கின் உடல்நலம் பற்றிய தகவல்களை தெரிவித்த அச்சு ஊடகங்களுக்கு நன்றி  என்று கவாஸ்கர் கூறினார்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube


Back to Top