மேஷம்:
அசுவினி: மனம் அவசரமாக செயல்பட தோன்றும். ஆனால் பதற மாட்டீர்கள்.
பரணி: நிதானமான போக்கு வெற்றிக்கு வழிவகுக்கும் என்று உணர்வீர்கள்.
கார்த்திகை 1: பிள்ளைகளின் திறமைகள் வெளிப்படுவதால் பாராட்டு வரும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: உங்களது பேச்சில் கோபம் தெரியாத அளவு பக்குவம் இருக்கும்.
ரோகிணி: முன்பிருந்த வீண் அலைச்சல் குறையும். வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: சவாலான விஷயங்களை கூட சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த பணம் வரும். சமூகத்தில் செல்வாக்குக் கூடும்.
திருவாதிரை: முன்பிருந்த கோபம் மாறி உடன்பிறந்தோர் உதவி செய்வார்கள்.
புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்பட்டு பொருளாதார சிக்கல்களை சமாளிப்பீர்கள்.
கடகம்:
புனர்பூசம் 4: இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். பகைவரின் மனம் மாறும்.
பூசம்: சில ஆச்சர்யங்கள் உங்களைத் தேடி வரும். பழைய கடன் தீரும்.
ஆயில்யம்: சிக்கலான பிரச்னைகளில் சுமுகமான முடிவை காண்பீர்கள்.
சிம்மம்:
மகம்: முந்தைய கடமை ஒன்றை நன்கு முடித்து நிம்மதி காண்பீர்கள்.
பூரம்: தந்தை வழி சொத்து வழக்குகள் இருந்தால் சாதகமாக முடியும்.
உத்திரம் 1: காலையிலேயே மனதிற்கு இனிய சம்பவங்கள் நடக்கக்கூடும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: தேவையற்ற கற்பனையால் தடுமாற்றம் அடையாதீர்கள்.
அஸ்தம்: இன்று அனைத்திலும் கவனமாக இருந்து வெற்றி பெறுவீர்கள்.
சித்திரை 1,2: உங்களின் தொடர்புகள் விரிவடையும். தேவைகள் நிறைவேறும்.
துலாம்:
சித்திரை 3,4: உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளில் நல்லதொரு திருப்பம் ஏற்படும்.
சுவாதி: கவனக் குறைவால் முன்பு ஏற்பட்டிருந்த கஷ்டங்கள் தீரும்.
விசாகம் 1,2,3: பிள்ளைகள் உங்களின் மனம் குளிரும்படி நடந்து கொள்வர்.
விருச்சிகம்:
விசாகம் 4: வாழ்க்கைத் துணை மூலம் பெற்றோருக்கு ஆதாயம் உண்டு.
அனுஷம்: இக்கட்டான சூழலில் நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.
கேட்டை: புதுவருட முதல் நாளே நன்மைகள் அடுத்தடுத்து நடக்கும்.
தனுசு:
மூலம்: பணியாளர்கள் அனைத்து செயல்களிலும் வெற்றிகளை காண்பீர்கள்.
பூராடம்: வாக்குவாதங்களில் உங்களுக்கு நிறைய ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திராடம் 1: மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வம்பிலிருந்து மீள்வீர்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: இன்று உற்சாகமாக பொழுது போகும். தைரியம் கூடும்.
திருவோணம்: மனசாட்சிபடி செயல்படுவீர்கள். மனம் மகிழும் நாள்.
அவிட்டம் 1,2: பல நாளாக தள்ளிப்போட்ட வேலைகளை இன்று முடிப்பீர்கள்
கும்பம்:
அவிட்டம் 3,4: மனதிற்கு நெருக்கமானவரின் ஆதரவால் உற்சாகம் ஏற்படும்.
சதயம்: பெரிய அளவில் இல்லாவிடிலும் சிறு சாதக அலை இருக்கும்.
பூரட்டாதி 1,2,3: தாயாருடன் இருந்த நெருக்கமும், அன்பும் கூடுதலாகும்.
மீனம்:
பூரட்டாதி 4: புதிய வேலைக்காக செய்த முயற்சிகள் வெற்றி பெறும் நாள்.
உத்திரட்டாதி: உங்களின் மனதிற்கு பிடித்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
ரேவதி: உங்களின் துணிச்சலான செயலுக்காக அனைவராலும் போற்றப்படுவீர்கள்.

மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
lanka4youtube