மேஷம்:
அசுவினி: எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. புகழ்மிக்கவர்களை சந்திப்பீர்கள்.
பரணி: உங்கள் திட்டங்களை சேதாரம் இன்றி நிறைவேற்றுவீர்கள்.
கார்த்திகை 1: நிதானப்போக்கு காரணமாக வரவிருந்த சிக்கல் நீங்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: அலைபேசி மூலமாக கேட்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.
ரோகிணி: நண்பர்களிடையே வாக்கு வாதங்கள், மன உளைச்சல் இருக்கும்.
மிருகசீரிடம் 1,2: தெளிவான மன நிலையால் பணியிடத்தில் நல்லபெயர் வரும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: விட்டுக் கொடுத்து சென்று பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.
திருவாதிரை: பிரகாசமான நாள். எடுத்த செயலில் வெற்றி காண்பீர்கள்
புனர்பூசம் 1,2,3: புது வேலை கிடைக்கும். பதவியின் மூலம் உற்சாகம் ஏற்படும்.
கடகம்:
புனர்பூசம் 4: உங்களுக்கு கிடைக்க இருக்கும் பதவியை யாராலும் தடுக்க முடியாது.
பூசம்: வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ஆயில்யம்: குடும்ப விஷயத்தில் பிறரின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்
சிம்மம்:
மகம்: உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது உங்கள் பணிக்கு நல்லது.
பூரம்: இன்று வரும் மெயில் ஒன்று இனிய தகவலை கொண்டு வரும்.
உத்திரம் 1: பணியிடம் தொடர்பான பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: சமூகத்தில் ஏற்படும் தொடர்பால் புதிய அனுபவம் உண்டாகும்.
அஸ்தம்: இன்று நீங்கள் சுபநிகழ்ச்சிகளில் விருப்பமின்றிக் கலந்து கொள்வீர்கள்.
சித்திரை 1,2: அந்தஸ்து உயரும். பழைய நண்பர் ஒருவர் தொடர்பு கொள்வார்.
துலாம்:
சித்திரை 3,4: குடும்பத்தினரின் குறிப்பறிந்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
சுவாதி: சொத்து வாங்குவது, விற்பது சுமாரான லாபமே தரக்கூடும்.
விசாகம் 1,2,3: பணியிடம் அல்லது கட்சியில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும்.
அனுஷம்: பணியாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
கேட்டை: மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடைபெறும். இல்லத் திருமணம் நடக்கும்,
தனுசு:
மூலம்: குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும்.
பூராடம்: விடிவு காலம் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
உத்திராடம் 1: குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: ஒவ்வொரு பேச்சிலும், செயலிலும் அதீத கவனம் தேவை.
திருவோணம்: கவனம் சிதறும். யாரிடமும் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்,
அவிட்டம் 1,2: மூத்தவர்களுடன் நேற்று இருந்த சச்சரவுகள் நீங்கும் நாள்.
கும்பம்:
அவிட்டம் 3,4: மனம் மகிழ்ச்சி அடையும்படியான சம்பவங்கள் நடைபெறும் நாள்.
சதயம்: வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த விரும்பத்தக்க மாற்றம் ஒன்று ஏற்படும்.
மீனம்:
பூரட்டாதி 4: வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி மெயிலில் வரும்.
உத்திரட்டாதி: தாயாரின் உடல்நலம் பற்றிய வீண் பயம் இன்று தீரும்.
ரேவதி: பெண்கள் உடல்நலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
lanka4youtube