2020-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் முக்கிய நிகழ்வுகள்....

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு அதிக அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி போட்டிகள் நடைபெற்றன.

கடந்த ஆண்டில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை பார்க்கலாம்.....

1. ஐசிசி தரவரிசையில் நியூசிலாந்து முதல் இடம்

நியூசிலாந்து அணி கடந்த ஆண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் நடைபெற்றது. ஐந்திலும் வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கடந்த ஆண்டு சிறப்பானதாக அமைந்துள்ளது. அவர் 4 டெஸ்டில் 498 ரன்கள் விளாசியுள்ளார். வெலிங்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியல் 89 ரன்கள் அடித்தது நியூசிலாந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.இந்த ஐந்து வெற்றிகள் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து முதல் இடத்தை பிடித்ததோடு கேன் வில்லியம்சனும் முதல் இடம் பிடித்தார்.

டிம் சவுத்தி 30 விக்கெட்டும், இந்தியாவுக்கு எதிராக அறிமுகம் ஆன ஜேமிசன் 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

2. இந்திய அணியின் வரலாற்று வெற்றியும், 36 ரன்னில் சுருண்டு மோசமான சாதனையும்....

மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் இந்திய அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமான சாதனையை பதிவு செய்த பின், அதில் இருந்து மீண்டும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை, ஒரு அணியின் சூப்பர் கம்பேக்காக கருதப்படுகிறது.கிரிக்கெட் விமர்சகர்கள் எல்லோரும் இந்தியா 0-4 எனத் தொடரை தோற்கும் எனக் கூறிவந்த நிலையில், இந்திய அணி அனைவரது வாயையும் அடைத்தது.

3. ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் 13-வது சீசனை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

4. எம்எஸ் டோனியின் ஓய்வு முடிவு....

டோனி இந்திய அணியில் விளையாடுவரா? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்த நிலையில் ஆகஸ்ட் 15-ந்தேதி தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10733 ரன்கள் குவித்துள்ளா. கேப்டனாக 69 சதவீதம் வெற்றியை பதிவு செய்துள்ள டோனி, சேஸிங்கில் 102.71 சராசரி வைத்துள்ளார்.

90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்கள் அடித்துள்ளார். 2007-ல் டி20 உலக கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பையையும், 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று கொடுத்த ஒரே இந்திய கேப்டன் ஆவார். இவர் கேப்டனாக இருக்கும்போது இந்திய அணி 2009-ல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் இடத்தை பிடித்தது.

5. ஆண்டர்சன் 600 விக்கெட், பிராட் 500 விக்கெட், சவுத்தி 300 விக்கெட்

இங்கிலாந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டில் அசார் அலியை வீழ்த்தி 600 விக்கெட்டை பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் 600 விக்கெட் வீழ்த்தியது இதுவே முதன்முறையாகும்.

ஸ்டூவர்ட் பிராட் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். நியூசிலாந்தின் டிம் சவுத்தி 300 விக்கெட் வீழ்த்தினார்.

6. 12 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கான்பெர்ரா 3-வது ஒருநாள் போட்டியில் 78 ப்நதில் 63 ரன்கள் அடித்த விராட் கோலி அதிகவேகமாக 12 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் தெண்டுல்கரிடம் இருந்து பறித்தார். தெண்டுல்கர் 300 இன்னிங்சில் இந்த சாதனையை தொட்ட நிலையில், விராட் கோலி 242 இன்னிங்சில் எட்டினார்.

7. டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் தொடர் வெற்றி

சிட்னியில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது. இதற்கு முன் பாகிஸ்தான் 2018-ல் தொடர்ச்சியாக 9 வெற்றிகள் பெற்றிருந்தது.

கடைசி 7 தொடர்களில் ஐந்தில் வெற்றி பெற்றது. 7 தொடர்களில் தோல்வியை சந்திக்கவில்லை. கடந்த அண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்திருந்தது.

8. தென்ஆப்பிரிக்காவில் தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளை வென்ற இங்கிலாந்து

இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. அதன்பின் கடைசி மூன்று போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

9. இங்கிலாந்து மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

கொரோனா தொற்றால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட பின் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று விளையாடியது. சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதற்கு முன் 2000-த்தில் இங்சிலாந்து மண்ணில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்றது.

10. இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலியா

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 2-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top