சோதிடம்

04.01.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: பெண்கள் சவாலான செயல்கள் செய்து பெருமிதம் அடைவீர்கள்.

பரணி: மனப்போராட்டங்கள் ஓயும். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள்.

கார்த்திகை 1: எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திருமணம் கூடிவரும்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும்.

ரோகிணி: கடினமாக உழைத்தே எதையும் சாதிக்க வேண்டிவரும்.

மிருகசீரிடம் 1,2: தொடர்பற்ற பழைய நண்பர்கள் மீண்டும் இணைவார்கள்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: பகைத்த சொந்தபந்தங்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

திருவாதிரை: பல காலம் திட்டமிட்டபடி புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

புனர்பூசம் 1,2,3: வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் குறையும். குடும்ப நலம் கூடும்.

கடகம்: 

புனர்பூசம் 4: சேமிப்புக் கூடும். வியாபாரத்தில் புதியவர்களின் அறிமுகம் ஏற்படும்

பூசம்: உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

ஆயில்யம்: தாய்வழி உறவினர்களிடம் வீண் தகராறு செய்ய வேண்டாம்.

சிம்மம்: 

மகம்: உங்களை எதிர்ப்போரிடமும் கூடக் கனிவாக பேசி நல்ல பெயர் எடுப்பீர்கள்.

பூரம்: உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வது நன்மை அளிக்கும்.

உத்திரம் 1: பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்

கன்னி: 

உத்திரம் 2,3,4: பொது நல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்களின் வரவு உயரும்.

அஸ்தம்: அலுவலகத்தில் எதிர்பாராத நபருடைய சந்திப்பு நிகழும் நாள்.

சித்திரை 1,2: தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

துலாம்: 

சித்திரை 3,4: பிறருடன் வீண்விவாதங்களை தவிர்த்து நிம்மதி காண்பீர்கள்.

சுவாதி: உறவினரால் ஏற்பட்டிருந்த பிரச்னை நீங்கும். நிம்மதி ஏற்படும்.

விசாகம் 1,2,3: சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. யோகம் வரும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: சிலருக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும்.

அனுஷம்: தாயாரின் உடல்நலன் நன்றாக இருக்கும். சேமிப்பு கூடும்.

கேட்டை: தொடங்கும் முயற்சி இழுபறியானாலும் அனுகூலமாக முடியும்.

தனுசு: 

மூலம்: பிள்ளைகளுடன் அதிகக் கண்டிப்பின்றி நடந்து கொள்ள முயலுங்கள்.

பூராடம்: வாழ்க்கைத் துணையால் வெற்றியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

உத்திராடம் 1: புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: அன்றாட விஷயங்கள் மாறுதலின்றி நடைபெறும் நாள்.

திருவோணம்: உங்களின் கடின உழைப்பால் எதிர்பார்த்ததை விட வரவு கூடும்.

அவிட்டம் 1,2: வாழ்க்கைத்துணையின் முயற்சியால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: எதிலும் கவனமாயிருங்கள். யாரையும் அதிகம் நம்ப வேண்டாம்.

சதயம்: அலுவலகத்தில் அவசரப்படாமல் செயல்படுங்கள். நண்பர்கள் உதவுவர்.

பூரட்டாதி 1,2,3: புதிய முதலீடுகள் வேண்டாம். எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.

மீனம்: 

பூரட்டாதி 4: சகோதரர்களால் நன்மையும், சங்கடமும் ஏற்படக்கூடும்.

உத்திரட்டாதி: குடும்பத்தினர் இடையே முன்பு இருந்ததை விட ஒற்றுமை கூடும்.

ரேவதி: பெரியவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top