இன்று இசை மேதை ஆர் டி பர்மன் இறந்த நாள்

இந்திப் படவுலகில் 1970-80 ஆண்டுகளில் இசை சாம்ராஜ்ஜியம் நடத்திய ஆர்.டி.பர்மன் என்னும் ராகுல்தேவ் பர்மன் சுமார் 330 படங்களுக்கு இசையமைத்தவர். இந்திய திரையிசையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் என்றால் மிகையல்ல.

தமிழகத்திலும் தனது காலத்தால் அழிக்க முடியாத திரை இசை மெட்டுகளால் கோடானுக்கோடி இந்தியர்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளார். இந்தியா முழுவதுமே இவரது இசையில் கட்டுண்டு கிடந்த காலம் அது. தமிழ் நாடெங்கும் எழுபதுகளில் இவரது இந்திப் பாடல்கள்தான் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தன. இந்தி தவிர, வங்காளம், தமிழ் படங்களுக்கும் பர்மன் இசையமைத்துள்ளார்

மெஹபூபா... ஆர்டி பர்மனின் தனித்துவம் மிக்க குரலுக்கு பல கோடி ரசிகர்கள் உண்டு. இன்றும் அவர்கள் பர்மனைக் கொண்டாடி வருகின்றனர். இவரது குரலில் வெளியான ‘ஷோலே' படத்தின் ‘மெஹபூபா ஓ மெஹபூபா' பாடல் இந்தியாவின் பட்டித்தொட்டிகளில் வாழ்ந்த மக்களைக் கூட கூத்தாட வைத்தது. தி ட்ரெயின் படத்தில் இடம்பெற்ற மேரிஜான் மெய்னே கஹான்... இன்றும் க்ளப்களில் ஹாட் பாட்டு. சனம் தேரி கஸம் படத்தில் ஜானா ஓ மெரி ஜானா... என்ற பாட்டு இப்போது கேட்டாலும் ஆட வைக்கும்.

ஆர்டி பர்மன் இறந்துவிட்டாலும், அவரது பாடல்கள் இன்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் நிலைத்துவிட்டன. இன்று உலகின் எந்தப் பகுதியில் இந்தி சினிமா இசை ஒலித்தாலும், அங்கு ஆர் டி பர்மனின் பாடல் இல்லாமலிருக்காது. 


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtu

Back to Top