சோதிடம்

05.01.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: குடும்பத்தினர் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள்.

பரணி: தம்பதிகளிடையே ஒருங்கிணைந்த எதிர்காலத்திட்டம் உருவாகும்.

கார்த்திகை 1: அலைபேசியின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: சக வியாபாரிகள் மூலம் ஏற்பட்ட தடைகள் குறையும்

ரோகிணி: புதிய முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் விரைந்து முன்னேறுவீர்கள்.

மிருகசீரிடம் 1,2: திடீர் செலவுகள் வந்தாலும் கடன் வாங்க வேண்டாம்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: சக ஊழியர்களால் சிறு சிரமங்கள் ஏற்பட்டு சரியாகும்.

திருவாதிரை: இளைஞர்களுக்கு எதிர்பார்த்ததை விட வெற்றி வாய்ப்பு கூடும்.

புனர்பூசம் 1,2,3: தொட்டது துலங்கும். நண்பர்களுடன் வருத்தம் வரலாம்.

கடகம்: 

புனர்பூசம் 4: பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்ட முயற்சிப்பீர்கள்.

பூசம்: சாலையில் வண்டி ஓட்டும்போது சற்று கவனம் தேவை.

ஆயில்யம்: ஏழை, எளியவர்களுக்கு மனம் இரங்கி நன்மை செய்வீர்கள்.

சிம்மம்: 

மகம்: அலுவலக விஷயத்தில் இருந்த வீண் கவலை தேவையே இல்லை.

பூரம்: பல விஷயங்களில் முன்பு இருந்த பிரச்னையில் இருந்து மீண்டு வருவீர்கள்

உத்திரம் 1: பிள்ளைகள் வெளியூரில் இருந்து நல்ல செய்தியுடன் வருவார்கள்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: சிலருக்கு திடீரென்று முன்பிருந்த பிரச்னைகள் தீரும்.

அஸ்தம்: மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதால் பழி ஏற்படலாம்.

சித்திரை 1,2: நல்லவர்கள் யார் என்பதை கண்டறிய முயலுங்கள்.

துலாம்: 

சித்திரை 3,4: முக்கிய முடிவுகளை சரியான நேரத்தில் எடுப்பீர்கள்.

சுவாதி: சக ஊழியர்களால் வீண் பழி நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்

விசாகம் 1,2,3: அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: மிகக் குழப்பமான சமயத்தில் சரியான வழிகாட்டல் கிடைக்கும்.

அனுஷம்: உறவினர் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னையைத் தீர்ப்பீர்கள்.

கேட்டை: பிள்ளைகளின் நன்மைக்காக எடுத்த திட்டம் அனுகூலமாக முடியும்.

தனுசு: 

மூலம்: சிலருக்கு வாடிக்கையாளர்களால் சந்தோஷங்கள் ஏற்படக்கூடும்.

பூராடம்: சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். பயங்கள் நீங்கும்.

உத்திராடம் 1: உற்சாகமான நாள். முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: உங்களின் பெருந்தன்மையால் தொல்லைகள் நீங்கும்.

திருவோணம்: சகோதரி மூலம் எதிர்பார்த்த விஷயம் வெற்றியாகும்.

அவிட்டம் 1,2: நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பம்: 

அவிட்டம் 3,4: நண்பர்கள் இடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் நீங்கும்

சதயம்: யாரைப் பற்றியாவது புறம் பேசி வம்பில் மாட்டிக் கொள்வீர்கள்.

பூரட்டாதி 1,2,3: பெரிய அளவில் புது முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்.

மீனம்: 

பூரட்டாதி 4: வேலைச்சுமை அதிகரிக்கும். தீய வழியில் செல்ல வேண்டாம்.

உத்திரட்டாதி: அலுவலகத்தில் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரேவதி: நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். நம்பிக்கை அதிகரிக்கும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top