மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு வணக்க நாள் இன்றாகும்

சந்திரிக்கா அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழின அழிப்புக் கொள்கையை அம்பலப்படுத்தி தமிழீழ விடியலிற்கு உறுதுணையாக உழைத்தபோது, சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து சந்திரிக்கா அரசின் கொலைக் கரங்களால் 05.01.2000 அன்று சுட்டு படுகொலை செய்யப்பட்ட மனித உரிமையாளரும், சட்டத்தரணியுமான மாமனிதர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

 சிங்களத் தலைநகரில் தனித்து நின்று சிங்களப் பேரினவாதத்திற்கு சவால் விடுத்து. ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்துப் போராடியவர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள். இவரின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் இவருக்கு மாமனிதர் விருது வழங்கப் பட்டது.

உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

சிறிலங்காவின் கொலைக் கரங்களால் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலம்

தமிழினத்தின் விடுதலைக்காக சிறீலங்காவின் தலைநகரில் நின்று குரலெழுப்பியவர், சொல்லிலும் செயலிலும் தமிழீழ விடுதலைக்கு கொழும்பிலும் சர்வதேச அரங்கிலும் தளராது உழைத்தவர்.

சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிக்காவின் சமாதானவேடத்தை ஜெனிவாவிலும் (சுவிஸ்) ஹோய்க் (நெதர்லாந்து) நகரிலும் நடந்த ஐ.நா. வின் மனித உரிமைகள் கூட்டத்தொடர்களில் பலதடவைகள் தோலுரித்துக்காட்டியவர். இறுதியாக இரண்டாவது தடவையாக சந்திரிகா ஜனாதிபதியாக பதவியேற்ற பொது கூறிய ஆணவமான தமிழர் விரோத உரைக்கெதிராக பகிரங்கமாக பதிலேழுப்பியவர்.

தனிமனிதரை கொள்ளும் நோக்கம் மட்டுமல்லாமல் அவர் சார்ந்த கொள்கையை முறியடிக்கலாம் என்ற எண்ணத்துடனேயே படுகொலை செய்தார்கள். ஆனால் அதில் தோற்றுவிட்டனர் என்றே சொல்லலாம்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் தமிழ் புத்திஜீவிகள் சமுதாயத்திற்கு ஒரு விதையை தூவிச்சென்றுள்ளார் (Legacy). அதைத் தொடர்ந்து செல்லவேண்டியது புத்திஜீவிகள் சமுதாயத்தின் கடமையாகும். அவர்களின் தேசத்திற்கான பங்களிப்பு, தனிமனிதர்களை அழிப்பதால் கொள்கை முன்னெடுப்புக்கள் பிந்தங்கிவிடாது என்பதை சிங்கள இனவெறியர்களுக்கு புரியவைக்கும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtu

Back to Top