சோதிடம்

06.01.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. நிதானமாக நன்மை வரும்.

பரணி: உடல்நலம் லேசாக பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும்.

கார்த்திகை 1: மாணவர்கள் கூடுதலாக உழைத்து வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: அதிக முயற்சியின் காரணமாக வருமானம் அதிகரிக்கும்.

ரோகிணி: வீண்செலவுகள் எதுவும் ஏற்பட்டாலும் சமாளித்து வெல்வீர்கள்.

மிருகசீரிடம் 1,2: மற்றவர் தலையீட்டால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: வாடிக்கையாளர்களிடம் பேசும்போது பொறுமை தேவை.

திருவாதிரை: முன்பு நீங்கள் இழந்திருந்த பணம் திரும்பக் கிடைக்கும்.

புனர்பூசம் 1,2,3: கடன் வாங்காமல் செலவைச் சமாளித்து விடுவீர்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: மற்றவர்களுக்காக வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூசம்: பெண்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நன்மை தரும்.

ஆயில்யம்: இனிய நாள். நெருங்கியவர்களுடன் உறவு நன்றாக இருக்கும்.

சிம்மம்: 

மகம்: உறவினர்களிடையே மகிழ்ச்சி நிலவும். உதவிகள் செய்வீர்கள்.

பூரம்: நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் 1: பிள்ளைகளால் பெற்றோருக்குப் பெருமிதம் ஏற்படும் நாள்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: வீண் செலவுகளும் சிலரால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.

அஸ்தம்: உறவினர்களுடன் பேசும்போது பொறுமை இழக்க வேண்டாம்.

சித்திரை 1,2: இளைய சகோதரர்களுக்கு உங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும்.

துலாம்: 

சித்திரை 3,4: மன உறுதியால் எதிர்பார்த்த விஷயங்கள் வெற்றிகரமாக முடியும்.

சுவாதி: வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நட்பு வட்டம் விரியும்.

விசாகம் 1,2,3: கூட்டு தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: பணியாளர்கள் அவசரப்படாமல் அடி எடுத்து வைக்க வேண்டும்.

அனுஷம்: சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.

கேட்டை: முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு.

தனுசு: 

மூலம்: குடும்பம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நிறைவேறும்.

பூராடம்: பெற்றோருக்கு இதுவரை இருந்து வந்த பிடிவாதப் போக்கு மாறும்.

உத்திராடம் 1: சிலருக்கு எதிர்பாராத ஆதாயங்களால் குதுாகலம் ஏற்படும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: வேலை விஷயமாக வெளியூர் சென்றவர்கள் திரும்புவர்.

திருவோணம்: கையெழுத்துப் போடுவதற்கு முன் எச்சரிக்கையுடன் இருங்கள்..

அவிட்டம் 1,2: பிரியமானவர்களின் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சி தரும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: பெற்றோருக்கு ஏற்படும் திடீர் செலவுகள் மகிழ்ச்சி தரும்.

சதயம்: எதிலும் மூன்றாவது நபர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்.

பூரட்டாதி 1,2,3: பணியாளர்கள் ஊக்கத்துடன் செயல்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.

மீனம்: 

பூரட்டாதி 4: மற்றவருக்கு உதவுவதால் அலைச்சலும், செலவுகளும் ஏற்படும்.

உத்திரட்டாதி: பணியிடத்தில் உங்களுக்குச் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

ரேவதி: பிள்ளைகள் எதிர்பார்த்த விஷயம் அனுகூலமாக முடியும் நாள்


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top