சோதிடம்

07.01.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: சகோதர வகையில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயம் முடியும்.

பரணி: பொறுமை அவசியம். கடன் வாங்க வேண்டிய நிலை உண்டாகும்

கார்த்திகை 1: பணி சம்பந்தமாக நீங்கள் எடுத்த திட்டம் நிறைவேறும்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: பணியாளர்கள் ஊக்கத்துடன் செயல்பட்டு நன்மை அடைவீரகள்.

ரோகிணி: சில வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரம் சுமாராக இருக்கும்.

மிருகசீரிடம் 1,2: கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும். பணி சிறக்கும்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தின் ஆதரவு உண்டு.

திருவாதிரை: சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் சாதுார்யமாக செயல்பட்டு சமாளிப்பீர்கள்.

புனர்பூசம் 1,2,3: உடன்பிறந்தோருடைய சில பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: பொறுமை மிக அவசியம். ஆர்வத்துடன் நன்மை செய்வீர்கள்.

பூசம்: உங்களுக்கு தேவையான பணம் கைக்கு வருவதற்குப் பலர் உதவுவார்கள்.

ஆயில்யம்: நல்ல காரணத்தினால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

சிம்மம்: 

மகம்: பிள்ளைகளின் விருப்பத்தை சிறு சிரமத்துடன் நிறைவேற்றுவீர்கள்.

பூரம்: நீங்கள் முன்பு உதவி செய்தவர்கள் இன்று நன்றி பாராட்டுவார்கள்.

உத்திரம் 1: குடும்பத்தினர் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வீர்கள்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த விஷயம் கிடைக்கும்.

அஸ்தம்: செலவுக்கு வாய்ப்பு உண்டு என்பதால் அதற்கு தயாராக இருங்கள்.

சித்திரை 1,2: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க இயலாது.

துலாம்: 

சித்திரை 3,4: அலைச்சலும், செலவுகளும் ஏற்படும் போது இயல்பாக ஏற்பீர்கள்.

சுவாதி: சகோதர, சகோதரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

விசாகம் 1,2,3: சகபணியாளர்களால் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.

விருச்சிகம்: 

விசாகம் 4: கடன் வாங்க வேண்டாம். நண்பர்கள் அந்தரத்தைப் பகிர்வார்கள்.

அனுஷம்: சரிவுகளை சமாளித்து வெற்றிப் பாதையை நோக்கிச் செல்வீர்கள்.

கேட்டை: சமீபத்தில் ஏற்பட்ட பக்குவத்தால் எதையும் சமாளிக்க முடியும்.

தனுசு: 

மூலம்: பெண்கள் தொடங்கும் முயற்சிகள் ஓரளவு வெற்றி தரும்.

பூராடம்: திடீர்ப் பணவரவு உண்டாகும். பெண்களால் சிறு தொல்லை வரும்.

உத்திராடம் 1: குடும்பத்தில் இழந்திருந்த நிம்மதி பிள்ளைகளால் மீளும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: நன்மைகள் சிறிதளவு தள்ளிப்போனாலும் நன்கு முடியும்.

திருவோணம்: இதுவரை இருந்த பொருளாதார பிரச்னைகள் குறையும்.

அவிட்டம் 1,2: வசிப்பிடம் வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு பிளாட் அமையும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: சிலருக்கு சமாளிக்கும்படியான சிறு சிறு செலவுகள் உண்டாகும்.

சதயம்: உங்கள் துறையில் மதிக்கும் பெரியவர்களுடன் சந்திப்பு நிகழும்.

பூரட்டாதி 1,2,3: மனசங்கடங்கள் தோன்றும். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மீனம்: 

பூரட்டாதி 4: கடந்த இரண்டு நாளாக இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

உத்திரட்டாதி: அளவுக்கு அதிகமாக யாரிடமும் பழக வேண்டாம்.

ரேவதி: உங்கள் செயல்கள் வீண் பழி ஏற்படுத்தாமல் கவனமாக இருங்கள்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube


Back to Top