சோதிடம்

08.01.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: எந்த விஷயத்தையும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும்.

பரணி: பழைய கடன்கள் வசூலாகும். பணியாளர்களுக்கு மனஅழுத்தம் தீரும்.

கார்த்திகை 1: கணவருக்கு உதவிகள் செய்து பாராட்டு பெறுவீர்கள்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: கடந்த சில நாளாக இருந்து வந்த மனஉளைச்சல் தீரும்.

ரோகிணி: என்றைக்கோ உழைத்த பலனை இப்போது பெற்று மகிழ்வீர்கள்.

மிருகசீரிடம் 1,2: பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: பயண திட்டங்களில் ஏற்படும் திடீர் மாற்றம் நன்மை தரும்.

திருவாதிரை: நண்பர்களுடன் மனம் விட்டு பேசி பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்.

புனர்பூசம் 1,2,3: சகோதரர்களுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: செலவுக்கேற்ற வருமானம் வரும். தேவையற்ற வாதம் வேண்டாம்.

பூசம்: மனைவிக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கித் தந்து மகிழ்விப்பீர்கள்.

ஆயில்யம்: பயணங்கள் செல்வீர்கள். விஷேசங்களில் பங்கு பெறுவீர்கள்.

சிம்மம்: 

மகம்: ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில்களுக்கு செல்ல தடை வரலாம்.

பூரம்: அதிகாரிகளின் பாராட்டுதலை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

உத்திரம் 1: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது நல்லது

கன்னி: 

உத்திரம் 2,3,4: திருமணம் தொடர்பான முயற்சியில் சாதகமான பலன் உண்டு.

அஸ்தம்: அதிகாரியை அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்துக்கு நல்லது.

சித்திரை 1,2: வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு உண்டு.

துலாம்: 

சித்திரை 3,4: உறவினர் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

சுவாதி: மனவருத்தம் தீரும். தம்பதிகளிடையே இருந்த பிரச்னை மறையும்.

விசாகம் 1,2,3: காதலர்களிடையே இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி நிம்மதி காண்பார்கள்.

அனுஷம்: எதிர்பார்த்த பணம் வரும். நண்பர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

கேட்டை: பல மாதங்களாக திட்டமிட்ட விஷயங்கள் செயல் வடிவம் பெறும்.

தனுசு: 

மூலம்: நீங்கள் முன்பு செய்த செயல்கள் இப்போது நன்மை தரும்.

பூராடம்: மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

உத்திராடம் 1: குடும்பத்தில் சிறு சிறு மன வருத்தங்கள் வந்து நீங்கும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: பிள்ளைகள் மூலம் சில செலவுகள் ஏற்படக்கூடும்.

திருவோணம்: நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.

அவிட்டம் 1,2: உறவுகளால் நன்மை உண்டு. தந்தையின் உடல் நலம் தேறும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: பழக்கமில்லாத பொழுது போக்குகளில் ஆர்வம் ஏற்படும்.

சதயம்: உடல்நலம் பற்றிய விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் கவனிப்பீர்கள்.

பூரட்டாதி 1,2,3: உங்கள் தகுதிக்கு ஏற்ற பொருத்தமான வேலை கிடைக்கும்.

மீனம்: 

பூரட்டாதி 4: குடும்பத்திற்காகச் செலவுகள் செய்து அன்பைப் பெறுவீர்கள்.

உத்திரட்டாதி: நல்ல மனம் கொண்ட உறவினர்களால் சந்தோஷம் கூடும்.

ரேவதி: வீண் விவாதங்கள் வேண்டாம். தீயோரிடமிருந்து விலகியிருப்பது நல்லது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top