சோதிடம்

09.01.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: பணம் வந்தாலும் சேமிக்கவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள்.

பரணி: பழி வர வேண்டாம் என்றால் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

கார்த்திகை 1: பயணம் செல்ல நேரிடலாம். முயற்சியில் வெற்றி உண்டு.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: மற்றவர்களுக்கு உதவி செய்து நற்பெயர் எடுப்பீர்கள்.

ரோகிணி: வாழ்க்கைத்துணையின் முயற்சி மூலம் லாபம் கிடைக்கும்.

மிருகசீரிடம் 1,2: மற்றவர் பொருளை கையாளும்போது கவனமாக இருங்கள்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: மனசஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும்.

திருவாதிரை: உங்களைக் குற்றம் சொல்ல நினைப்பவர்கள் மாறுவார்கள்.

புனர்பூசம் 1,2,3: முன்பு வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்

கடகம்: 

புனர்பூசம் 4: வேலைச்சுமை குறையும். போராட்டமான நிலை மாறும்.

பூசம்: எந்த செயலையும் வேகமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

ஆயில்யம்: சில விஷயங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும்.

சிம்மம்: 

மகம்: நிதானத்தைக் கடைபிடியுங்கள். வேற்று நாட்டவர் நன்மை செய்வார்.

பூரம்: பொறுமை வெற்றிக்கு வழிவகுக்கும். பொழுது போக்கு அதிகரிக்கும்.

உத்திரம் 1: சோம்பலைக் குறைத்து பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். எப்போதும் பணிவாக இருங்கள்.

அஸ்தம்: உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள்.

சித்திரை 1,2: தடைபட்ட சுபமான விஷயங்கள் எல்லாம் தானாக கூடிவரும்.

துலாம்: 

சித்திரை 3,4: உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

சுவாதி: குழப்பத்திற்கு தீர்வு காண நல்லவர்களின் உதவியை பெறுவீர்கள்.

விசாகம் 1,2,3: குழப்பம், தடுமாற்றம், அவநம்பிக்கை ஆகியவை நீங்கும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: உள்ளூரில் நல்ல விஷயங்கள் செய்து நற்பெயர் எடுப்பீர்கள்.

அனுஷம்: நண்பர்களுக்குப் பஞ்சாயத்து விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

கேட்டை: தொழிலில் சிறு மாறுதல்கள் செய்து முன்னேற்றம் அடைவீர்கள்.

தனுசு: 

மூலம்: பெற்றோர் எதிர்பாராத சாதனைகளை நீங்கள் செய்து காட்டுவீர்கள்.

பூராடம்: உடல்நலம் காரணமாக விரக்தியில் இருப்பவர்கள் குணமடைவர்.

உத்திராடம் 1: அலைச்சல், மருத்துவச் செலவு குறைந்து நிம்மதி வரும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: மனதில் இருக்கும் குற்ற உணர்வில் இருந்து மீள்வீர்கள்.

திருவோணம்: இளைஞர்கள் சில சாதனைகள் செய்து புகழ் அடைவீர்கள்.

அவிட்டம் 1,2: அலுவலகத்தில் உரிய கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: சொத்து சம்பந்தமான பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

சதயம்: கவலைகள் தீர்ந்து மனம் விட்டுச் சிரித்துப் பேச ஆரம்பிப்பீர்கள்.

பூரட்டாதி 1,2,3: சொத்து சம்பந்தமாக திடீரென்று ஒருமித்த கருத்து ஏற்படும்.

மீனம்: 

பூரட்டாதி 4: வீட்டின் அமைப்பை மாற்றுவதன் மூலம் நன்மை ஏற்படும்.

உத்திரட்டாதி: பழைய வீட்டு உபயோகப் பொருட்களை விற்று வேறு வாங்குவீர்கள்.

ரேவதி: பணியிடத்தில் உங்களின் சில செயல்கள் பாராட்டப்படும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top