சோதிடம்

11.01.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: பலரது ஒத்துழைப்பால் நன்மை ஒன்று நிகழும். கனவு நனவாகும்.

பரணி: உங்களது பொறுப்புகளை பிறர் பகிர்ந்து கொள்வர். மனநிம்மதி கூடும்.

கார்த்திகை 1: எதிர்பாராத சண்டை சச்சரவுகள் சஞ்சலத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: உங்களது செயலால் உங்களுக்கே சிரமம் ஏற்படக்கூடும்.

ரோகிணி: பிள்ளைகளால் சிறு சிரமங்கள் ஏற்பட்டாலும் அவர்களை மன்னிப்பீர்கள்.

மிருகசீரிடம் 1,2: உழைப்பு நன்மை தரும். புது அறிமுகம் கிடைக்கும்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: உங்கள் திறமை தரும் வெற்றியால் புகழ் அதிகரிக்கும்.

திருவாதிரை: தம்பதியர் இடையே புரிதல் ஏற்படும். எதிர்காலத் திட்டம் உருவாகும்.

புனர்பூசம் 1,2,3: தந்தையுடன் இருந்த வருத்தம் நீங்கி சுமுக உறவு ஏற்படும்.

கடகம்: 

புனர்பூசம் 4: நண்பரிடம் எதிர்பார்த்த ஆறுதல் கிடைப்பதால் மகிழ்வீர்கள்.

பூசம்: பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ஆயில்யம்: உங்கள் முயற்சியால் சில நற்பலன்கள் கிடைக்கக்கூடும்.

சிம்மம்: 

மகம்: தன்னம்பிக்கையின்றி இருந்த நீங்கள் அதிலிருந்து மெல்ல மீளுவீரகள்.

பூரம்: பழைய தவறுகளால் ஏற்பட்ட மன உறுத்தல் நீங்கி நிம்மதி வரும்.

உத்திரம் 1: பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: உங்களின் முயற்சியால் பணியில் முன்னேற்றம் ஏற்படும்.

அஸ்தம்: உங்கள் வாழ்வில் உதாரணமாக நினைப்பவரைச் சந்திப்பீர்கள்.

சித்திரை 1,2: அநாவசிய கோபத்தால் உங்கள் சுயத்தை இழக்காதீர்கள்.

துலாம்: 

சித்திரை 3,4: சிலருக்குப் புது வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும்.

சுவாதி: அரசின் உதவிகள் நீங்கள் எதிர்பார்த்தபடியே எளிதில் கிடைக்கும்.

விசாகம் 1,2,3: பணிபுரியும் பெண்களுக்குப் பதவி, சம்பள உயர்வு உண்டு.

விருச்சிகம்: 

விசாகம் 4: முன்பு செய்த பயணம் ஒன்றின் பலனாக நன்மை விளையும்.

அனுஷம்: கடந்த கால அனுபவங்களால் உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

கேட்டை: எதிலும் சிந்தித்து செயல்பட்டு சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள்.

தனுசு: 

மூலம்: அன்பை வெளிப்படுத்தி மற்றவர்களின் மனங்களை வெல்வீர்கள்.

பூராடம்: உங்கள் பெயர் பிரபலமாவதற்குத் தகுந்த நிகழ்ச்சிகள் நடக்கும்.

உத்திராடம் 1: மந்த நிலைகள் மாறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: புதிய விஷயங்களைக் கற்று தவறுகளை மாற்றுவீர்கள்

திருவோணம்: மனதிற்கு நெருக்கமானவர்களின் செயல் நெகிழ வைக்கும்.

அவிட்டம் 1,2: சிறிய உடல் உபாதைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: வெளிநாடு செல்லும் யோகம் எதிர்பார்த்தபடி கைகூடும்.

சதயம்: பொறுமை காரணமாக நல்ல விஷயம் ஒன்றை அடைவீர்கள்.

பூரட்டாதி 1,2,3: புதிய திட்டங்களில் தடைகள், தாமதங்கள் ஏற்படலாம்.

மீனம்: 

பூரட்டாதி 4: அதிகாரிகளால் சிலருக்கு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

உத்திரட்டாதி: தியாகம் செய்யும் மனப்பான்மையால் வெற்றி காண்பீர்கள்.

ரேவதி: மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்வீர்கள். மன மாற்றம் ஏற்படும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube


Back to Top