கடலில் விழுந்த இந்தோனேசிய விமான பாகங்கள் கண்டுபிடிப்பு

இந்தோனேசிய கடல் பகுதியில் சனிக்கிழமை விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் மற்றும் கருப்புப் பெட்டிகளின் இருப்பிடத்தை மீட்புக் குழுவினா் கண்டறிந்தனா்.

இதுகுறித்து நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவா் பாகுஸ் புருஹிடோ கூறியதாவது

ஸ்ரீவிஜயா ஏா் விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போா்க் கப்பல், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து வெளியாகும் சமிஞைகளைக் கண்டறிந்துள்ளது.

இதன் மூலம், விமான பாகங்களும் கருப்புப் பெட்டிகளும் இருக்குமிடம் கண்டறியப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், 62 பேருடன் வந்தன் மாகாணம், தங்கராங் நகர விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட 4 நிமிடங்களில் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.

 

மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top