வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும்: உச்ச நீதிமன்றம்

 மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

வேளாண் சட்டங்களை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அரசு நினைப்பது ஏன் என்று தெரியவில்லை. வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயாராக இருந்தால், விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு தரப்பில் எந்த விதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதோடு, வேளாண் சட்டங்கள் சிறந்தவை என்று கூறி ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம், வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தாவிட்டால், உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube


Back to Top