வைகோ உள்ளிட்ட 300 பேர் கைது

யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளியவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.லயோலா கல்லூரி அருகே வைகோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன்,

 இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதன்பின்னர் அங்கிருந்து அவர்கள் பேரணியாக, இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சென்றபோது நடுவழியில் 

பொலிசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top