சோதிடம்

12.01.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: அதிர்ஷ்டம் உங்களை எட்டிப் பார்த்துக் கைகொடுக்கும் நாள்.

பரணி: கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

கார்த்திகை 1: பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். சுமுகமான நாள்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: செலவுகள் அதிகரிக்கலாம். பொறுமை மிக அவசியம்.

ரோகிணி: காலையில் வருத்தம் ஏற்பட்டு மாலையில் நீங்கிவிடும்.

மிருகசீரிடம் 1,2: பொருளாதாரத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: செலவுகள் அதிகரிக்கும். மன உளைச்சல் நீங்கும்.

திருவாதிரை: சவால்களை சமாளிக்கும் திறனை வளர்த்து கொள்வீர்கள்.

புனர்பூசம் 1,2,3: உணவு விஷயத்தில் அக்கறை கொள்வது மிகவும் நல்லது.

கடகம்: 

புனர்பூசம் 4: பிள்ளைகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் நாள்.

பூசம்: தாய் வழி உறவினர்களால் தேவையற்ற பிரச்னைகள் வரலாம்.

ஆயில்யம்: உதவிகளும், நன்மைகளும் வரும். பேச்சில் நிதானம் தேவை.

சிம்மம்: 

மகம்: உங்களால் தீர்க்க முடியாத பிரச்னை உங்கள் நண்பர்களால் தீரும்.

பூரம்: எதிர்பாலினத்தைச் சேர்ந்த நட்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

உத்திரம் 1: சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத மகிழ்ச்சி உண்டு.

கன்னி: 

உத்திரம் 2,3,4: குடும்பத்தில் ஒருவர் வெளிநாடு செல்ல ஏற்பாடாகும்.

அஸ்தம்: மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

சித்திரை 1,2: கவனமான செயல்களால் அவப்பெயரிலிருந்து தப்புவீர்கள்.

துலாம்: 

சித்திரை 3,4: பொழுது போக்கு அம்சங்களால் கவலைகளை மறப்பீர்கள்.

சுவாதி: பணியிடத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் தோன்றி மறையும்.

விசாகம் 1,2,3: உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள்.

விருச்சிகம்: 

விசாகம் 4: பணவரவும், மகிழ்ச்சியும் நீடிக்கும். எதிரிகள் கதிகலங்குவர்

அனுஷம்: பேச்சில் கவனம் தேவை. இல்லையென்றால் சிரமம் வரும்.

கேட்டை: பல காலமாக காத்திருந்த நன்மை ஒன்று இன்று நிகழும்.

தனுசு: 

மூலம்: உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

பூராடம்: பொருளாதார நிலையில் இருந்து வந்த மந்த நிலை நீங்கும்.

உத்திராடம் 1: தடைகளும், தாமதங்களுமாய் இருந்த பயணம் ஏற்பாடாகும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: பணியில் இது நாள் வரை இருந்த குழப்பங்கள் தீரும்.

திருவோணம்: நியாயமான காரணத்தால் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

அவிட்டம் 1,2: குடும்பத்தினர் உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பர்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: உடல் சோர்வு ஏற்படலாம். அழகுணர்ச்சி கூடுதலாகும்.

சதயம்: தீய வழியில் பணவரவுக்கு வாய்ப்பு வந்தால் ஏற்க வேண்டாம்.

பூரட்டாதி 1,2,3: பொருளாதார நிலையை பற்றி கவலைப்படாதீர்கள்.

மீனம்: 

பூரட்டாதி 4: வேலைகளை விரைந்து முடித்து நிம்மதி காண்பீர்கள்.

உத்திரட்டாதி: பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சேமிப்பு பயன்படும்.

ரேவதி: உறவினரிடம் எதிர்பார்த்த ஆலோசனை உங்களைத் தேடி வரும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top