மேஷம்:
அசுவினி: பணியிடத்தில் சிறப்பாகச் செயலாற்றி ஆதாயம் பெறுவீர்கள்.
பரணி: குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
கார்த்திகை 1: திட்டமிட்ட பேச்சுவார்த்தைகள் தாமதமாக வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: மூத்தவர் உடல் நலன் பற்றிய கவலைகள் குறையும்.
ரோகிணி: தொழிலில் இருந்த தொய்வு நிலையை முயன்று நீக்குவீர்கள்
மிருகசீரிடம் 1,2: பிறரது சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: பணத்துக்காக தவறான பாதைக்கு செல்ல வேண்டாம்.
திருவாதிரை: சட்டென உணர்ச்சி வசப்படக்கூடிய நிகழ்வுகள் இன்று ஏற்படலாம்.
புனர்பூசம் 1,2,3: வெறுப்புக் காட்ட வேண்டிய இடத்திலும் அமைதி காப்பீர்கள்.
கடகம்:
புனர்பூசம் 4: பேச்சில் நிதானம் தேவை. தொழில் முயற்சியை தள்ளி வைக்கவும்.
பூசம்: குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
ஆயில்யம்: தொழிலில் கவனம் தேவை. யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள்.
சிம்மம்:
மகம்: பணிச்சுமை அதிகரித்தாலும் அதை திறம்பட சமாளித்து வெல்வீர்கள்.
பூரம்: குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியவர்களுக்கு நன்மை உண்டு.
உத்திரம் 1: நல்ல செய்தி வந்து சேரும். பணியாளர் முன்னேற்றம் அடைவர்.
கன்னி:
உத்திரம் 2,3,4: சவால்களை எதிர்கொள்வதில் இருந்த சிக்கல்கள் தீரும்.
அஸ்தம்: சிறிய குழப்பங்கள் வந்துபோகும். ஆலோசித்துச் செயல்படவும்.
சித்திரை 1,2: நிம்மதி ஏற்படும் நாள். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும்.
துலாம்:
சித்திரை 3,4: உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பீர்கள்.
சுவாதி: பணிச்சுமை காரணமாக வியாபாரத்தில் இருந்த சிரமம் தீரும்.
விசாகம் 1,2,3: எதிரிகள் உங்களால் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.
விருச்சிகம்:
விசாகம் 4: உங்களின் முயற்சிக்கு உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
அனுஷம்: பொருளாதாரம் செழிக்கும். பொதுநலத்துடன் செயல்படுவீர்கள்.
கேட்டை: குடும்ப ஒற்றுமையில் அனுகூலமான பயன்கள் உண்டாகும்.
தனுசு:
மூலம்: உறவினரிடம் இத்தனை நாள் இருந்து வந்த கசப்புணர்வு மாறும்.
பூராடம்: பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் எடுப்பீர்கள்.
உத்திராடம் 1: முழு முயற்சியால் சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: நிர்வாகத் திறமையை அதிகரித்துக் கொள்வீர்கள்.
திருவோணம்: பெண்கள் பாராட்டு பெறுவர். முயற்சியில் வெல்வீர்கள்.
அவிட்டம் 1,2: சட்ட நுணுக்கங்களை இன்று அறிந்து கொள்வீர்கள்.
கும்பம்:
அவிட்டம் 3,4: சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள்.
சதயம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் உதவுவர்.
பூரட்டாதி 1,2,3: புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபட்டு வெல்வீர்கள்.
மீனம்:
பூரட்டாதி 4: பழைய கடன்கள் வசூலாகும். எதிரிகளின் பலம் குறையும்.
உத்திரட்டாதி: வாகன யோகம் உண்டாகும். தர்ம செயல்களில் ஈடுபடுவீர்கள்.
ரேவதி: மனஅழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும்.

மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
lanka4youtube