ஜல்லிக்கட்டுக்கு செல்லும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி

நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல்காந்தி வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினும் நாளை அவனியாபுரம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொங்கல் நாளானா நாளை புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளை காண காங்கிர முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி நாளை அவனியாபுரம் செல்கிறார். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் நாளை அவனியாபுரம் செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கான முன்னோட்டமாக ராகுல்காந்தி – உதயநிதி சந்திப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top