தற்போதைய செய்தி

இப்படியும் ஒரு தலைமை காவலரா?

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் இப்படியும் ஒரு தலைமை காவலர்....

நகர் வடக்கு காவல் நிலையம் வந்த திண்டுக்கல் கல்நூத்தாம் பட்டியைசேர்ந்த  ராமக்கால் , வயது 80 என்பவர் தான்வைத்திருந்த முதியோர் பென்சன் பணம் ரூ 1000 ஆயிரம் தொலைந்து விட்டதாகவும் புகார் செய்தும் நான்கு நாட்களாக அலைந்து வருவதாக சொன்னவரிடம் அவர் நிலைமையை எண்ணி பரிவுகொண்ட தலைமை காவலர் திரு.வின்சென்ட் அவர்கள் தன்னுடைய சம்பளத்திலிருந்து ரூ1000 கொடுத்தும் ,  பஸ்செலவுக்கு 100 கொடுத்தும் அவரை அனுப்பிவைத்தார்.

மனித நேயமிக்க மனிதர்கள் ஒரு சிலர் இன்று இருக்கத்தான் செய்கிறார்கள் மனிதநேயம் இன்னும் சாகவில்லை.....திரு.வின்சென்ட் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும்...


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top