தற்போதைய செய்தி

இலங்கையில் புதியவகை வீரியம்கூடிய கொரோனா அடையாளம்; துரித நடவடிக்கையில் சுகாதார பிரிவு

பிரிட்டன் மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை வீரியம் கூடிய கொரோனா தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த தகவலை சுகாதார சேவைகள் பிரதி இயக்குநர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.பிரிட்டனில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.எனினும் பொதுமக்களை இது குறித்து தேவையற்ற அச்சத்திற்குள்ளாகவேண்டியதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top