கவிதை

ஆற்றின் நடுவில்

ஆற்றின் நடுவில்

அங்கங்கு காணப்படும்

சின்ன சின்ன

கற்கள் உருவமாய்

இவைகள் சிற்பிகள்

செதுக்கிய சிலைகள்

அல்ல

ஒவ்வொன்றும் ஒவ்வொரு

உருவமாய் !

சின்ன சின்ன சிதறல்

காயங்கள் இல்லாமல்

மழு மழுவென்று

செதுக்கி இருக்கிறது

இதை வடித்தவன்

இந்த ஆற்றில்

உருண்டோடும் நீர்

என்பதாலோ !


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top