கவிதை

தனிமை அதுவே உண்மை

தனிமை அதை நேசித்திடு

நம் இறுதி யாத்திரை வரை

உடன் வரும் ஒரே உறவது!!

வேண்டாம் என்றாலும்

வெறுத்து ஒதுக்கினாலும்

உன்னை விட்டு விலகாது,

உன்னுடன் வரும் ஒரே நட்பது!!

யார் இங்கு விலகினாலும்

இடை வந்த எந்த உறவு பிரிந்தாலும்

பெற்றோர் மறைந்தாலும்

நாம் பெற்றவர்கள் மறந்தாலும்

நேசிக்கத் தொடங்கி விட்டால்

தனிமை போல்

இனிமை ஒன்றுமில்லை

உண்மை அதுவன்றி இங்கு

வேறொன்றும் இல்லை....

பின்தொடரும் நிழலைக் கூட

மறைத்து விடும் இரவு

என்றும் மறையாமல்

நம்மை தாலாட்டும் ஒரே உறவு

தனிமை....


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top